அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டியை உயர்த்தும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெரிய முடிவைத் தொடர்ந்து சாமானியர்கள் அத்தியாவசிய பொருட்கள், வங்கி சேவைகள், மருத்துவமனைகள் மற்றும் ஹோட்டல்களுக்கு அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும்.
எடையளவுச் சட்டத்தின் (Metrology Act), படி பேக் செய்யப்பட்ட பால், மோர், லஸ்ஸி உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரியாக விதித்து ஜூலை 18ஆம் தேதி முதல் அமலுக்கு வருமென கடந்த ஜூன் மாதமே ஜி.எஸ்.டி கவுன்சில் செய்தி வெளியிட்டது. விலக்கு அளிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, மாவு உள்ளிட்ட பொருட்களுக்கும் தற்போது 5 சதவீதமாக ஜி.எஸ்.டி விதித்து ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
பாலாடைக்கட்டி, லஸ்ஸி, மோர், பால், பேக்கேஜ் செய்யப்பட்ட தயிர், கோதுமை மாவு, இதர தானியங்கள், தேன், பப்பாளி, தானியங்கள், இறைச்சி மற்றும் மீன் (freezer இல் வைக்கப்படாதது), லட்டு மற்றும் வெல்லம் போன்ற முன் பேக்கேஜ் செய்யப்பட்ட லேபிள்கள் கொண்ட விவசாயப் பொருட்களின் விலை ஜூலை 18 முதல் உயர்ந்துள்ளது.
தற்போது பிராண்டட் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. பேக்கிங் இல்லாத மற்றும் லேபிள் இடப்படாத தயாரிப்புகளுக்கு வரி இலவசம்.
பின்வரும் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி உயர்ந்துள்ளது. முழுமையான பட்டியல் இதோ
- ஜூலை 18 முதல் 5% ஜிஎஸ்டி விதிக்கப்படுவதால், டெட்ரா பேக் தயிர், லஸ்ஸி மற்றும் மோர் பால், விலை உயர்த்தப்பட்டுள்ளது, இதற்கு முன் இதற்கு வரி விதிப்பு கிடையாது
- காசோலை புத்தகங்களை(chequebooks) வழங்குவதற்கு முன்பு வங்கி வசூலித்த சேவை வரியில் இப்போது 18% ஜிஎஸ்டியும் சேரும்.
- மருத்துவமனைகளில் ரூ.5,000க்கு மேல் (ICU அல்லாத) அறைகளின் வாடகைக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
- இவை தவிர, இப்போது atlas-கள் கொண்ட வரைபடங்களுக்கு கூட 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
- நாள் ஒன்றுக்கு ரூ.1,000-க்கும் குறைவான ஹோட்டல் அறைகளுக்கு முன்பு விதிக்கப்படாத 12 சதவீதம் ஜிஎஸ்டி ஜூலை 18 முதல் விதிக்கப்படுகிறது.
- எல்இடி டார் லைட், எல்இடி விளக்குகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும், இதற்கு முன் இதற்கு வரி விதிப்பு கிடையாது
- பிளேடுகள், காகிதம் வெட்டும் கத்தரிக்கோல், பென்சில் ஷார்பனர்கள், கரண்டிகள், forks, skimmers மற்றும் cake-server-கள் ஆகியவற்றிற்கு முன்பு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது, இது 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், இந்த ஜிஎஸ்டி வரி உயர்வை சற்று தாமதமாக கொண்டு வந்திருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.