வீடு, வாகனம் வாங்க கடன் வாங்குவது போல் கல்விக்கும் கடன் வாங்கலாம். மற்ற கடன்களை தவணை முறையில் திருப்பிச் செலுத்துவதைப் போலவே இதுவும் திருப்பிச் செலுத்தப்படுகிறது. படித்து முடித்த பிறகு, வேலை கிடைக்கும் வரை ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் வழங்கப்படுகிறது.
அதன் பிறகு கல்வி கடனை திருப்பி செலுத்துவதற்கான மாதந்திர தவணைகள் தொடங்கும். பெரும்பாலும் கடினமான பொருளாதார சூழ்நிலை காரணமாக, பல அறிவார்ந்த குழந்தைகளுக்கு உயர்கல்வி வாய்ப்பு கிடைப்பதில்லை, ஆனால் அவர்களுக்கு கல்வி கடன் வசதி மிகவும் உதவியாக இருக்கும்.
பிள்ளைகள் நிறைய படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்பதே பெற்றோரின் கனவு. இதற்காக வசதி குறைவாக இருந்தாலும், நல்ல பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள். ஆனால் சில பெற்றோர்கள் பொருளாதாரச் சிக்கல்களால் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. குறிப்பாக முதுகலை அல்லது மருத்துவம், பொறியியல் படிப்புகளின் செலவு அதிகமாக இருப்பதால், பலரால் உயர்கல்வி பெற முடியவில்லை.
ALSO READ | ரெக்கரிங் டெபாசிட்டின் வட்டி விகிதங்களை பாதிக்கும் காரணங்கள் என்ன?
இதுபோன்ற சமயங்களில், பல குழந்தைகள் தங்கள் கனவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு வேறு படிப்பைத் தேர்வு செய்கிறார்கள். கல்விக் கடன் வசதி, இதுபோன்ற பல குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்றுவதை சாத்தியமாக்கியுள்ளது. நாட்டின் முன்னணி வங்கிகள் பல கல்விக் கடன்களை வழங்குகின்றன. உங்கள் கல்விக் கடனுடன் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கே காணலாம்.
கல்விக் கடனின் நன்மைகள் மற்றும் அம்சங்கள் :
இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகள் கல்விக் கடன்களை வழங்குகின்றன. இந்த கடன்களுக்கான வட்டி விகிதம் 6.75 சதவீதத்திலிருந்து தொடங்குகிறது. கல்விக் கடனின் கீழ் ரூ.1 கோடி வரை கடன் கிடைக்கும். பெரும்பாலான வங்கிகள் 15 ஆண்டுகள் வரை கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் அனுமதித்துள்ளது. இந்தியாவில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புக்கும், வெளிநாட்டில் படிப்பதற்கும் கல்விக் கடன்கள் கிடைக்கின்றன.
சில வங்கிகள் வெளிநாட்டில் படிக்க விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பே கடன்களை வழங்குகின்றன. பல வங்கிகள், கல்விக் கடன்களை வழங்குவதில் தங்கள் வங்கி ஊழியர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. சில வங்கிகள் மாணவிகளுக்கு வழங்கும் கடனில் வட்டியில் சலுகைகளை வழங்குகின்றன.
ALSO READ | கிழிந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதை எங்கு கொடுக்க வேண்டும்? கொடுத்தால் என்ன கிடைக்கும் தெரியுமா?
பெரும்பாலான வங்கிகளில் படிப்பை முடித்த பிறகு 1 வருடம் வரை கடன் கட்டுவதற்கு அவகாசம் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை. கல்விக் கடனுக்கு செலுத்தப்படும் வட்டிக்கு 8 ஆண்டுகள் வரை வரிச் சலுகைகளை வழங்கும் வங்கிகளும் உள்ளன. பெரிய வங்கிகளில் ரூ.7.5 லட்சம் வரை பிணையம் இல்லாத கடன்கள் கிடைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புகள் மற்றும் வங்கிகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட கடன்களுக்கு பிணையத்துடன் ஒரு கோடி ரூபாய் வரை கடனைப் பெறலாம். எந்தெந்தப் படிப்புகள் கல்விக் கடனுக்குத் தகுதியானவை என்பதை கடன் வழங்கும் வங்கிகள்தான் முடிவு செய்யும்.
பல்வேறு வங்கிகள் வழங்கும் கல்விக் கடன்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள் :
1. பஞ்சாப் நேஷனல் வங்கி
- விண்ணப்பதாரரின் தேவைக்கேற்ப கடன் தொகை வழங்கப்படுகிறது.
- கடன் திருப்பிச் செலுத்தும் அதிகபட்ச காலம் 15 ஆண்டுகள்
- 7.5 லட்சம் வரை பிணையில்லாமல் கடன் வழங்கப்படும்
- 4 லட்சம் வரை மார்ஜின் உள்ளது
- இந்தியர்களுக்கும், OCI / PIO மாணவர்களுக்கும் வெளிநாட்டில் பிறந்த இந்தியப் பெற்றோருக்கும், இந்தியாவில் படிப்பைத் தொடர விரும்புபவர்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது.
- கல்வி முடிந்த 6 மாதங்கள் முதல் 1 வருடம் காலம் கழித்து கடன் செலுத்தத் தொடங்கலாம்.
ALSO READ | போஸ்ட் ஆஃபீஸில் ரெக்கரிங் டெபாசிட் செய்ய வட்டி விகிதம் எவ்வளவு? முழு விவரம் இதோ!
2. எஸ்பிஐ கல்விக் கடன்
- கடன் காலம் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை வழங்கபப்டுகிறது.
- 7.5 லட்சம் வரை பிணையில்லாமல் கடன் கிடைக்கும்.
4 லட்சம் வரை மார்ஜின் உள்ளது
- படிப்பை முடித்த பிறகு 12 மாதங்களுக்குப் பிறகே கடன் தவணை தொடங்கும்
- படிப்பை முடிக்க கூடுதலாக, டாப்அப் கடனாக, இரண்டாவது முறையும் கடன் கிடைக்கும்
3. ஆக்சிஸ் வங்கி கல்விக் கடன்
- அதிகபட்ச கடன் தொகை ரூ.1 கோடி வரை வழங்கப்படுகிறது
- கடன் திருப்பிச் செலுத்தும் காலம் 15 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
- 4 லட்சம் வரை மார்ஜின் உள்ளது
- வங்கியில் கடன் விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து 15 வேலை நாட்களுக்குள் கடன் வழங்கப்படும்.
- தொழில் செய்பவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படும்
ALSO READ | தபால் நிலையம் வழங்கும் RD கணக்குகள் பற்றிய விவரங்கள்
4. பாங்க் ஆஃப் பரோடா கல்விக் கடன்
- அதிகபட்ச கடன் தொகையாக ரூ.80 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது
கடன் திருப்பிச் செலுத்தும் காலம் 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும்
- பள்ளிப்படிப்பிலிருந்து கல்விக்கு கடன்கள் வழங்கப்படுகிறது
- தேர்ந்தெடுக்கப்பட்ட கல்விக் கடன் திட்டங்களில் இலவச டெபிட் கார்டைப் பெறலாம்
- மாணவர்களுக்கு வட்டியில் தள்ளுபடி வழங்கப்படும்
5. HDFC வங்கி கல்விக் கடன்
- HDFC வங்கி 36 நாடுகளில் 950க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு கடன் வழங்குகிறது.
- இந்தியாவில் படிப்பதற்கு கடன் தொகை ரூ.20 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
- வெளிநாட்டில் படிக்க 35 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
- கடன் திருப்பிச் செலுத்தும் அதிகபட்ச காலம் 15 ஆண்டுகள்
- 7.5 லட்சம் வரை பிணையில்லாமல் கடன் கிடைக்கும்
- முதலிடம் பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கு முன்னுரிமை விகிதங்கள் வழங்கப்படுகின்றன
6. டாடா கேபிடல் கல்வி கடன்
- அதிகபட்ச கடன் தொகை ரூ.30 லட்சம் வரை வழங்கப்படுகிறது
- திருப்பிச் செலுத்தும் காலம் அதிகபட்சம் 6 ஆண்டுகள்
- விண்ணப்பதாரர்கள் தங்களின் வசதிக்கேற்ப 3 EMI திட்டங்களில் இருந்து கடன் தவணைகளை திருப்பிச் செலுத்துவதைத் தேர்வு செய்யலாம்
- இந்தக் கடனுக்கு குறைந்தபட்ச ஆவணங்கள் தேவை.
- கடன்களும் விரைவாக வழங்கப்படும்
ALSO READ | போஸ்ட் ஆபிஸில் RD செலுத்த தாமதமானால் அபராதம் செலுத்த வேண்டுமா? தாமதக் கட்டணங்கள் பற்றிய விவரங்கள்!
நாட்டில் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கல்விக் கடன்களை வழங்குகின்றன. பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, ஹெச்டிஎஃப்சி மற்றும் டாடா கேபிடல் ஆகிய வங்கிகளின் வட்டி விகிதங்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஒப்பிடுவதன் மூலம், எந்த வங்கி அல்லது நிதி நிறுவன கடன் உங்களுக்கு சிறந்தது என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.
இந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன்கள், வட்டி விகிதங்கள், பிற விதிமுறைகளை அறிந்து, உங்களுக்கு வசதியான இடத்தில் உங்கள் குழந்தைக்கு கடன் வாங்கி, அவருடைய உயர்கல்வி கனவை நிறைவேற்றலாம். இந்த தகவல் அவ்வப்போது புதுப்பிக்கப்படுகிறது என்பதால், நீங்கள் கடன் வாங்கும் நேரத்தில் அந்தந்த வங்கியின் அதிகார பூர்வமான வலைதளத்தில் கடன் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.