• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • சிறந்த கார் லோன் எது? கார் லோன் வாங்குவது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

சிறந்த கார் லோன் எது? கார் லோன் வாங்குவது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

சிறந்த கார் லோன்

சிறந்த கார் லோன்

Car Loan : இன்று கார் கடன் வழங்குவதற்கு பல வங்கிகள் உள்ளன. கடனைப் பெறுவதற்கு முன், கிடைக்கக்கூடிய அனைத்து விருப்பங்களையும் விரிவாகச் சரிபார்த்து, உங்களுக்குப் பொருத்தமானவற்றை மட்டும் தேர்வு செய்யவும்.

  • Share this:
    சொந்தமாக வீடு மற்றும் கார் வாங்குவதே பலரின் வாழ்நாள் கனவுகளாக இருந்து வருகின்றது. இன்றைய காலகட்டத்தில், கார்கள் அல்லது பிற விலையுயர்ந்த வாகனங்களை சொந்தமாக வாங்குவது அவ்வளவு கடினமானதல்ல. ரொக்கமாக செலுத்தி கார் வாங்கும் வசதி இல்லையென்றாலும், அதற்கு உதவியாக பல வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வாகனக் கடன்களை வழங்குகின்றன.

    அதிலும், நீங்கள் விரும்பும் காரை வாங்க பெரிய தொகை இல்லையென்றாலும், மாதத் தவணையாக செலுத்தி காரை சொந்தமாக்கிக் கொள்ள கார் லோன் வழங்கப்படுகிறது.

    கார் லோன் : அடிப்படை தகவல் :

    அனைத்து வகையான கார்களுக்கும் கடன் உதவி வழங்கப்படுகிறது. கார் கடனுக்கான வட்டி பொதுவாக 7% என்பதிலிருந்து தொடங்குகிறது. கடன் வழங்கும் வங்கியைப் பொறுத்து அதன் செயலாக்க கட்டணம் மாறுபடும். சில வங்கிகள் செயலாக்க கட்டணத்தையும் தள்ளுபடி செய்கின்றன. கார் கடன்கள் மாதாந்திர தவணையாக செலுத்தக்கூடிய காலம் ஒன்று முதல் எட்டு ஆண்டுகள் வரை ஆகும். கார் லோன் வழங்குபவர்கள் உங்கள் வருமானத்தின் அடிப்படையில் கடனை வழங்கலாம். ஆனால், சில வங்கிகளில், கடன் வழங்குவதற்கு ஏதேனும் உத்தரவாதம் தேவைப்படலாம். இதுவும் ஒவ்வொரு வங்கிக்கு வங்கி மாறுபடும்.

    ALSO READ |  போஸ்ட் ஆஃபீஸில் ரெக்கரிங் டெபாசிட் செய்ய வட்டி விகிதம் எவ்வளவு? முழு விவரம் இதோ!

    நீங்கள் கார் லோன் வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்தால், நீங்கள் கவனிக்க வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் இங்கே உள்ளன. வாகனம் வாங்குவதற்கான தகுதிகள் மற்றும் தகுதியை நிரூபிக்க தேவையான ஆவணங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

    தகுதிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் :

    பல நிதி நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்ட வாகனக் கடன்களின் தகுதிகள் மற்றும் தர நிலை வேறுபாடும்.

    - கடன் பெற விரும்புபவரின் வயது 18 முதல் 75 வயதுக்குள் இருக்க வேண்டும்.
    - குறைந்தபட்சமாக, ரூ.20,000 மாதம் வருமானம் இருக்க வேண்டும்.
    - தற்போதைய வேலையில் குறைந்தது 1 வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும்.
    -சுயதொழில் அல்லது வணிகம் செய்பவராக இருக்க வேண்டும். அதற்கு உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்
    - அரசு நிறுவனம் அல்லது தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்க வேண்டும்

    ALSO READ |  தபால் நிலையம் வழங்கும் RD கணக்குகள் பற்றிய விவரங்கள்

    கடன் வாங்குபவர்களுக்கு மேற்கூறிய தகுதிகள் உள்ளன என்பதை நிரூபிக்கும் ஆவணங்களும் தேவைப்படுகின்றன. பொதுவாக தேவைப்படும் ஆவணங்கள் பின்வருமாறு.

    • உங்கள் அடையாள அட்டையாக ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்

    • நீங்கள் வசிக்கும் முகவரி சான்றாக, ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, மின்சார கட்டண ரசீது, ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்

    • வருமானச்சான்று - நீங்கள் சம்பளம் வாங்குபவராக இருந்தால், உங்களின் மாதந்திர சாலரி ஸ்லிப், கடந்த ஆறு மாத வங்கிக்கணக்கு

    • ஸ்டேட்மென்ட், மற்றும் வருமான வரி ஆவணம் -படிவம் 16. நீங்கள் வணிகம் அல்லது சுய தொழில் செய்பவராக இருந்தால், வங்கிக்கணக்கு ஸ்டேட்மென்ட், வருமானச் சான்று, வருமான வரி அறிக்கை போன்றவை.


    கார் லோன் வாங்குவதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை :

    உங்களுக்கு மாதாமாதம் கார் தவணையை செலுத்தக்கூடிய அளவுக்கு வருமானம் இருக்கும் பட்சத்தில், நீங்கள் கார் லோனுக்கு நீங்கள் விரும்பும் வங்கியில் விண்ணப்பிக்கலாம். அதே நேரத்தில், அவற்றில் எது உங்களால் வாங்க முடியும் என்பதைக் கண்டுபிடிக்க மறக்காதீர்கள். கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் உங்களிடம் உள்ளதா என்பதை கடன் வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனம் இதன் அடிப்படையில் தான் தீர்மானிக்கும்.

    ALSO READ |  போஸ்ட் ஆபிஸில் RD செலுத்த தாமதமானால் அபராதம் செலுத்த வேண்டுமா? தாமதக் கட்டணங்கள் பற்றிய விவரங்கள்!

    அது போலவே, உங்கள் முகவரி மற்றும் அடையாளத்தை நிரூபிக்கும் ஆவணங்களை நீங்கள் ஒப்படைக்க வேண்டும். உங்கள் அடையாளம் மற்றும் நிரந்தர முகவரியை உறுதிப்படுத்த இவை தேவை. அவர்கள் பான் கார்டு தகவலைப் பயன்படுத்தி உங்களின் கடந்தகால கடன் பதிவுகளை சரிபார்ப்பார்கள்.

    கார் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது வங்கிகளின் கடன் அளவுகோல்கள், வட்டி மற்றும் எவ்வளவு கால அளவுக்கு கடன் வழங்கப்படுகிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் கடனை திருப்பிச் செலுத்த முடியுமா என்பதை ஆராயும் செயல்முறையின் ஒரு பகுதி தான் இது.

    வீட்டுக் கடன்களைப் போலவே, வாகனக் கடன்களுக்கும் நிலையான மற்றும் மாறும் வட்டி என்று இரண்டு வகையான வட்டி விகிதங்கள் உள்ளன. நாம் எவ்வளவு வசதியாக இருக்கிறோமோ, எவ்வளவு தொகையை திருப்பிச் செலுத்தக்கூடிய திறன் உள்ளதோ அந்த அவ்வளவு கடன் வாங்கலாம். ஃபிக்ஸட் வட்டி என்பது நீங்கள் நிலையான வட்டி விகித விருப்பத்தை எடுத்துக் கொண்டால், கடனுக்கான வட்டி விகிதம் காலம் முடியும் வரை ஒரே மாதிரியாக இருக்கும். ஃப்ளோட்டிங் என்பது ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) கடன் கொள்கையில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது பிற காரணங்களால் வங்கிகள் அவ்வப்போது வட்டி விகிதங்களை மாற்றும்.

    ALSO READ |  கல்விக் கடன் பெறுவதற்கான தகுதி என்னென்ன - கடன் பெற நீங்கள் தகுதியுடையவரா?

    அந்த நேரத்தில் மாற்றப்பட்ட வட்டி விகிதத்திற்கு ஏற்ப வங்கிகள் கடனுக்கான வட்டியை வசூலிக்கின்றன. இது கடன் வாங்குபவர்களுக்கு நன்மை பயக்கும். அவர்களின் கடன் தவணை அதாவது EMI குறைகிறது. ஆனால், வட்டி விகிதம் உயர்ந்தால், அதிகரித்த விகிதத்தில் வட்டி செலுத்த வேண்டும்.

    இப்போதெல்லாம், கடன் கொடுக்கும்போது கிரெடிட் ஸ்கோர் சரிபார்க்கப்படுகிறது. மேலும், பல வங்கிகள் அதன் அடிப்படையில் வட்டி விகிதங்களை வழங்குகின்றன, எனவே மலிவான கடனைப் பெற உங்கள் கிரெடிட் ஸ்கோர் முக்கியமானது. இதற்கு, நீங்கள் முன்பு கடன் வாங்கியிருந்தால், அதை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவது முக்கியம்.

    கார் கடனுக்கான காலம் பொதுவாக ஒன்று முதல் எட்டு ஆண்டுகள் வரை இருக்கலாம். அதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்க விரும்பினால், கடனின் மாத தவணை குறைவாக இருந்தாலும், அதிக தொகை வட்டியாக வசூலிக்கப்படும். மேலும், கார் கடனுக்கான வட்டி விகிதம் சுமார் 7 முதல் 9 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு வங்கியும் நிதி நிறுவனமும் வெவ்வேறு வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளன. மேலும், கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்த வேண்டும் என்றால், அதற்கும் வங்கி கட்டணம் வசூலிக்கப்படும். அதன் விகிதமும் வங்கிக்கு வங்கி மாறுபடும்.

    ALSO READ |  உயர்கல்விக்கு பணம் தேவைப்படுகிறதா? வங்கிகள் வழங்கும் சிறந்த கல்விக் கடன்கள் பற்றிய விவரங்கள்!

    நீங்கள் வாகனத்தை வாங்கிய ஷோரூமிலிருந்து, அதற்கான ரசீதுகளை வழங்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் பணம் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக ரசீதுகள் சரிபார்க்கப்படுகிறது. வாகனத்தின் காப்பீட்டு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் வாகனத்தை வாங்கும் போது அனைத்து விதிகள் மற்றும் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வது வங்கியின் பொறுப்பாகும்.

    2021ல் குறைந்த வட்டி விகித கார் கடன்கள் :

    * எஸ்பிஐ - நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, 7.25 சதவீத வட்டி விகிதத்தில் கார் கடனை வழங்குகிறது. காரின் ஆன்ரோடு விலையில் 90% வரை கடன் பெறலாம்.

    * பேங்க் ஆஃப் இந்தியா - 6.85% வட்டியில் கார் லோனை வழங்குகிறது. விகிதத்தை வழங்குகிறது. பண்டிகை காலத்தை முன்னிட்டு வங்கி வட்டி விகிதத்தையும் குறைத்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு டிசம்பர் 31 வரை தள்ளுபடி கிடைக்கும்.

    ALSO READ |  RD அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்களா? சிறந்த வட்டி வழங்கும் வங்கிகளின் லிஸ்ட்!

    * பாங்க் ஆஃப் பரோடா - கார் கடனுக்கான வட்டி விகிதம் 7%. காரின் ஆன்ரோடு விலையில் 90% வரை கடன் பெறலாம்.
    ஃபெடரல் வங்கி - கார் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.50% இல் தொடங்குகிறது.

    * ஐசிஐசிஐ வங்கி - தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி 7.5 சதவீத வட்டி விகிதத்தில் கார் லோன் வழங்குகிறது.

    இன்று கார் கடன் வழங்குவதற்கு பல வங்கிகள் உள்ளன. கடனைப் பெறுவதற்கு முன், கிடைக்கக்கூடிய அனைத்து விருப்பங்களையும் விரிவாகச் சரிபார்த்து, உங்களுக்குப் பொருத்தமானவற்றை மட்டும் தேர்வு செய்யவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: