Home /News /business /

உங்கள் குழந்தைகளின் பள்ளி கட்டணத்தைச் செலுத்தச் சிரமப்படுகிறீர்களா? இந்த ஆப்ஷனை ட்ரை பண்ணலாமே!

உங்கள் குழந்தைகளின் பள்ளி கட்டணத்தைச் செலுத்தச் சிரமப்படுகிறீர்களா? இந்த ஆப்ஷனை ட்ரை பண்ணலாமே!

பள்ளி கட்டணத்தை செலுத்த பெற்றோர்களுக்கு கடன் அளிக்கும் நிறுவங்கள்

பள்ளி கட்டணத்தை செலுத்த பெற்றோர்களுக்கு கடன் அளிக்கும் நிறுவங்கள்

பள்ளி கட்டண நிதி செலுத்தும் முறையில், குறிப்பிட்ட நிதி நிறுவனம் குழந்தைகளின் முழு கல்விக் கட்டணத்தையும் பள்ளிக்குச் செலுத்துகிறது மற்றும் பெற்றோர்கள் அதை எளிதாக வட்டியில்லா தவணைகளில் நிறுவனத்திற்குத் திருப்பி செலுத்தலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தற்போதைய காலகட்டத்தில் தங்கள் குழந்தைகளுக்குப் பள்ளி கட்டணம் செலுத்துவது ஏழை பெற்றோர்களுக்கு சிரமாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக கோவிட் தொற்று காலத்தில் பள்ளி கட்டணம் செலுத்தப் பெற்றோர்கள் கடும் சிரமத்தை எதிர் கொண்டனர்.  அவர்களுக்கு உதவும் வகையில் எளிய EMI அடிப்படையிலான பள்ளி கட்டண நிதியுதவி ஆப்ஷன் என்று புதிய நிதி வசதியை நிதி நிருவனங்கள் ஆன்லைனில் சேவையை அளிக்கின்றனர். 

    சில சமயங்களில் பெற்றோரிடம் போதுமான பணம் இல்லாததால், பிள்ளைகளுக்கான பள்ளி கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். இது போன்ற இக்கட்டான சூழலில் பள்ளி கட்டணத்தைச் செலுத்தப் பெற்றோர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த ஆப்ஷன் தான் ஸ்கூல் ஃபீ ஃபினான்ஸிங் (school fee financing). கல்விக் கடன்களுக்கான ஆப்ஷன் பெற்றோர்களுக்குக் கிடைத்தாலும் பெரும்பாலும் அவற்றின் ப்ராசஸ் சிக்கலானதாகவும், கல்விக் கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகமாகவும் இருக்கிறது.

    எனவே தான் சமீபத்திய ஆண்டுகளில் EMI அடிப்படையிலான பள்ளி கட்டண நிதியுதவி ஆப்ஷன் பெற்றோர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. பெற்றோர்களுக்கு உதவ கட்டண நிதி ஆப்ஷன் மிகவும் சாத்தியமான விருப்பமாக உருவெடுத்துள்ளதாக பைனான்ஸ்பீர் (Financepeer) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் ரோஹித் கஜ்பியே கூறி உள்ளார். பைனான்ஸ்பீர் மற்றும் கிரேக்வெஸ்ட் (GrayQuest) போன்ற பள்ளி கட்டணத்திற்கு நிதியளிக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து அதிக வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன.

    இது பற்றி விரிவாகப் பேசிய ரோஹித், இந்த பள்ளி கட்டண நிதி செலுத்தும் முறையில், குறிப்பிட்ட நிதி நிறுவனம் குழந்தைகளின் முழு கல்விக் கட்டணத்தையும் பள்ளிக்குச் செலுத்துகிறது மற்றும் பெற்றோர்கள் அதை எளிதாக வட்டியில்லா தவணைகளில் நிறுவனத்திற்குத் திருப்பி செலுத்தலாம். அதே போலப் பள்ளி கட்டண நிதியுதவிக்கு எந்த இணை அல்லது உத்தரவாத தாரர்களும் தேவையில்லை. கட்டணம் நிதியின் ப்ராசஸ் முழுவதுமாக டிஜிட்டல் முறையில் சில நிமிடங்களில் முடிக்கப்படும்.

    Also Read : மூத்த குடிமக்களுக்கு ஒரு குட்நியூஸ்... இந்த வங்கிகளில் எல்லாம் FD வட்டி விகிதம் உயர்வு.!

    பெற்றோர்கள் கட்டணம் செலுத்தக் கோரும் பள்ளியின் வங்கிக் கணக்கில் 24-48 வணிக நேரத்திற்குள் செலுத்தப்பட்டு விடும் என்றார். தங்கள் லோன் ஹிஸ்டரிஅல்லது சிபில் ஸ்கோரை பொருட்படுத்தாமல், கட்டண நிதியுதவிக்கு அனைத்து பெற்றோர்களும் விண்ணப்பிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான கட்டணம் நிதிகளைப் பெற்றோர்கள் பெறலாம். மேலும் பள்ளி கட்டண நிதியுதவி வழங்கும் பல நிறுவனங்கள், காப்பீடு, கேஷ்பேக்ஸ் மற்றும் பாயின்டஸ் அல்லது காயின்ஸ் போன்ற கூடுதல் நன்மைகளை வழங்குவதாகவும் ரோஹித் கூறி இருக்கிறார்.
    Published by:Janvi
    First published:

    Tags: Educational Loan, School education

    அடுத்த செய்தி