முகப்பு /செய்தி /வணிகம் / வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது..!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது..!

எல்பிஜி சிலிண்டர்

எல்பிஜி சிலிண்டர்

Cylinder price : சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது.

  • Last Updated :

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 187 ரூபாய் குறைந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தபடி எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி வருகின்றன.அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2,373 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை இன்று எண்ணெய் நிறுவனங்கள் சற்று குறைத்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்படி, 2,373 ரூபாயாக இருந்த வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை தற்போது 2,186 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது.  சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்துள்ளதால் ஹோட்டல், டீ கடை உள்ளிட்டவற்றின் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Must Read : வரிகள் தொடங்கி அபராதம் வரை.. ஜூலை 1 முதல் 6 முக்கிய மாற்றங்கள்! - கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க

top videos

    அதேசமயம், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் சிலிண்டர் ஒன்று 1,018.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Gas Cylinder Price, LPG, LPG Cylinder