ஹோம் /நியூஸ் /வணிகம் /

தொடர்ந்து 6ஆவது மாதமாக வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது.. முழு விவரம் இதோ..!

தொடர்ந்து 6ஆவது மாதமாக வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது.. முழு விவரம் இதோ..!

கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு

கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு

19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது ரூ.25.50 குறைந்துள்ளன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  அக்டோபர் மாத முதல் நாளான இன்று வர்த்தக பயன்பாடு கேஸ் சிலிண்டருக்கான விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் 6வது முறையாக வர்த்தக சிலிண்டர்களின் விலையானது குறைக்கப்பட்டுள்ளது.

  வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.

  உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியதை அடுத்து அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் விலையும் குறையத் தொடங்கியுள்ளது.

  எனவே, வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது ரூ.25.50 குறைந்துள்ளன. இதனால் சென்னையில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.2,045 இருந்து ரூ.2,009.50ஆக குறைந்தது. தலைநகர் டெல்லியில் ரூ.1,8885க்கு விற்பனையான ஒரு சிலிண்டர் தற்போது விலை குறைந்து ரூ. 1,859ஆக விற்பனை செய்யப்படுகிறது.

  இதையும் படிங்க: நாளை முதல் வரும் அதிரடி மாற்றம்..கிரெடிட், டெபிட் கார்டுகளை வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளவும்!

  கடந்த மே 19ம் தேதிக்கு பின்னர் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 6வது குறையாக குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தும் சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

  Published by:Kannan V
  First published:

  Tags: Gas Cylinder Price, LPG Cylinder