முகப்பு /செய்தி /வணிகம் / சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை 1.50 ரூபாய் குறைந்தது

சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை 1.50 ரூபாய் குறைந்தது

வர்த்தக சிலிண்டர்

வர்த்தக சிலிண்டர்

டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் நவம்பர் மாதம் விற்கப்பட்ட விலையிலேயே வர்த்தக பயன்பாடு சிலிண்டர்கள் விற்பனை ஆகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான  சிலிண்டரின் விலையை ரூ.1.50 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.

அதன்படி, ஒவ்வொரு மாதத்தின்  முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. இதில், வீட்டு பயன்பாடு சிலிண்டரின் விலையில் கடந்த சில மாதங்களாகவே எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் தொடர்கிறது.

அதேவேளையில், வணிக பயன்பாடு சிலிண்டரின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் ர்த்தக ரீதியான சமையல் சிலிண்டர் விலை, ரூ.115 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில், டிசம்பர் மாத விலையில் பெரிதாக மாற்றம் இல்லை.

இதையும் படிங்க: ஏர் இந்தியா உடன் இணையும் விஸ்தாரா.. டாடா அறிவிப்பு

டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் நவம்பர் மாதம் விற்கப்பட்ட விலையிலேயே வர்த்தக பயன்பாடு சிலிண்டர்கள் விற்பனை ஆகிறது. கொல்கத்தாவில் சிலிண்டரின் விலை 50 பைசாவும் சென்னையில் சிலிண்டரின் விலை 1.50 ரூபாயும் குறைந்துள்ளது.

அதன்படி, 19 கிலோ எடையுள்ள வர்த்க ரீதியான சமையல் சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.1744, மும்பையில் ரூ.1696, சென்னையில் ரூ.1891.50, கொல்கத்தாவில் 1845.50 விலையில் நீடிக்கிறது

First published:

Tags: Gas Cylinder Price, LPG Cylinder