ஹோம் /நியூஸ் /வணிகம் /

சிலிண்டர் விலை ரூ25 உயர்வு.. புத்தாண்டில் ஷாக் கொடுத்த LPG ரேட்!

சிலிண்டர் விலை ரூ25 உயர்வு.. புத்தாண்டில் ஷாக் கொடுத்த LPG ரேட்!

சிலிண்டர் விலை

சிலிண்டர் விலை

வணிக பயன்பாடு சிலிண்டரின் விலை ரூ.25 உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

2023ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.

அதன்படி,ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. இன்று ஜனவரி 1ஆம் தேதி என்பதால், விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.கடந்த மாதங்களைப் போலவே வீட்டு பயன்பாடு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் நீடிக்கிறது. அதேவேளையில், வணிக பயன்பாடு சிலிண்டரின் விலை ரூ.25 உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதன்படி, 19 கிலோ எடையுள்ள வர்த்க ரீதியான சமையல் சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.1768, மும்பையில் ரூ.1721, சென்னையில் ரூ.1917, கொல்கத்தாவில் ரூ.1870 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

கடந்தாண்டை பொருத்தவரை வர்த்தக சிலிண்டர்களின் பல மாதங்கள் தொடர்ச்சியாக குறைக்கப்பட்டு வந்தன.

இதையும் படிங்க: 2022 பாடா படுத்திடுச்சா? 2023-இல் கடன் இல்லாம இருக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..

அப்படியிருக்க இந்தாண்டு வர்த்தக சிலிண்டர் விலையோ உயர்வுடன் தொடங்கியுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டரை பொருத்தவரை சென்னையில் விலை ரூ.1,068.50 எனவும், டெல்லியில் ரூ.1,053 எனவும், மும்பையில் ரூ.1,052.50 எனவும், கொல்கத்தாவில் ரூ.1,079 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Gas Cylinder Price, LPG Cylinder