ஹோம் /நியூஸ் /வணிகம் /

LPG: குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை.. இன்றைய விலை எவ்வளவு?

LPG: குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை.. இன்றைய விலை எவ்வளவு?

சிலிண்டர் விலை

சிலிண்டர் விலை

ஜூலை 6ஆம் தேதிக்கு பிறகு வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் இதுவரை எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சென்னையில் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.115 வரை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  இந்தியாவில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பொதுமக்களுக்கு ஆறுதல் தரும் விதமாக நவம்பர் 1ஆம் தேதி சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. ஜூலை 6ஆம் தேதிக்கு பிறகு வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் இதுவரை எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலை 115 ரூபாய் குறைந்து 2 ஆயிரத்திற்கும் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

  முன்பு ரூ.2,009க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சிலிண்டர் தற்போது ரூ.1893 விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இது ரூ.1859.5 ஆக இருந்த 19 கிலோ எடையுள்ள இண்டேன் எல்பிஜி சிலிண்டரின் விலை தற்போது ரூ.1,744 ஆக குறைந்துள்ளது.

  14.2 கிலோ சிலிண்டரின் விலையில் மாற்றமில்லை

  S.noமாநிலம்/ மாவட்டம்விலை பட்டியல்
  1.டெல்லிரூ.1,053
  2.கொல்கத்தாரூ. 1,079
  3.சென்னைரூ.1,068.50
  4.மும்பைரூ.1,052

  19 கிலோ சிலிண்டரின் விலை பட்டியல்:

  S.noமாநிலம்/ மாவட்டம்விலை பட்டியல்
  1.டெல்லிரூ. 1,744
  2.கொல்கத்தாரூ.1,846
  3.சென்னைரூ. 1,893
  4.மும்பைரூ. 1,696

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Gas Cylinder Price, LPG, LPG Cylinder, Subsidised LPG cylinders