செலவைக் குறைக்க 13ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் காக்னிசென்ட்!

காக்னிசென்ட்

'நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்திய 5 ஆயிரம் பேருக்கு கூடுதல் திறன் பயிற்சிகள் அளித்து மீண்டும் பணியமர்த்தவும் திட்டம் உள்ளது'.

  • News18
  • Last Updated :
  • Share this:
இன்னும் சில மாதங்களில் சுமார் 13 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யப்போவதாக காக்னிசென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் செலவைக் கட்டுப்படுத்த இத்தகைய பணிநீக்க முடிவை எடுத்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2020-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே சுமார் 7 ஆயிரம் பணியாளர்களை பணியைவிட்டுச் செல்லும்மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காக்னிசென்ட் தலைமை நிர்வாக இயக்குநர் ப்ரியன் ஹம்ஃபைர்ஸ் கூறுகையில், “நடுத்தரம் முதல் மூத்தப் பணியாளர்கள் வரையில் சுமார் 10 ஆயிரம் அல்லது 12 ஆயிரம் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளோம். ஆனால், இவர்களுள் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்திய 5 ஆயிரம் பேருக்கு கூடுதல் திறன் பயிற்சிகள் அளித்து மீண்டும் பணியமர்த்தவும் திட்டம் உள்ளது.

ஆனால், நிச்சயமாக 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வரையில் பணி நீக்கம் செய்யப்படுவர். செலவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வருகிற 2021-ம் ஆண்டு 500-550 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சேமிக்கப்படும்” என்றார்.

மேலும் பார்க்க: ஐசிஐசிஐ வங்கியின் புதிய FD வட்டி வகிதம் இன்று முதல் அமல்..!

அல் பாக்தாதி கொலையா, தற்கொலயா?
Published by:Rahini M
First published: