மாயமான நிறுவனரால் வீழ்ந்த காஃபி டே நிறுவனப் பங்குகள்..!

சித்தார்த்தாவுக்கு சொந்தமாக உள்ள நிறுவனங்களில் மட்டும் சுமார் 30ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.

Web Desk | news18
Updated: July 30, 2019, 2:06 PM IST
மாயமான நிறுவனரால் வீழ்ந்த காஃபி டே நிறுவனப் பங்குகள்..!
கஃபே காஃபி டே
Web Desk | news18
Updated: July 30, 2019, 2:06 PM IST
கஃபே காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா மாயமானதை அடுத்து இன்று அந்நிறுவனத்தின் பங்குகள் 20 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளன.

தகவல்களின் அடிப்படையில், சித்தார்த்தா நேற்று மாலை மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றுப் பாலத்திலிருந்து மாயமாகி உள்ளார். அவரது கார் ஓட்டுநர் அளித்தத் தகவலின் பெயரில் சித்தார்த்தாவை தேடும் பணியில் தக்‌ஷிணா கன்னடா போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 9.19 மணி அளவில் கஃபே காபி டே நிறுவனப் பங்குகள் 20 சதவ்கித வீழ்ச்சியைச் சந்தித்தன. சமீபத்தில் சித்தார்த்தா ‘மைண்ட் ட்ரீ’ என்ற நிறுவனத்தில் தனக்குள்ள 20.41 சதவிகித பங்குகளை எல்&டி நிறுவனத்திடம் விற்றார். அதன் மூலம் சுமார் 3ஆயிரம் கோடி லாபம் கிடைக்கப்பெற்றுள்ளார்.


சித்தார்த்தாவுக்கு சொந்தமாக உள்ள நிறுவனங்களில் மட்டும் சுமார் 30ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இந்தியாவில் மட்டும் 250 நகரங்களில் 1,751 கிளைகள் உடன் கஃபே காஃபி டே உள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் காஃபி டே நிறுவனத்தின் வருவாய் 2,016 கோடி ரூபாய் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: இந்தியாவின் ’காஃபி கிங்’ வி.ஜி. சித்தார்த்தா வீழ்ந்தது எப்படி?
First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...