Home /News /business /

இரும்பு தாது, எஃகு மூல பொருட்கள் ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்த வேண்டும் - மத்திய அமைச்சர்களிடம் தமிழக தொழில் நிறுவன அமைப்பினர் மனு..

இரும்பு தாது, எஃகு மூல பொருட்கள் ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்த வேண்டும் - மத்திய அமைச்சர்களிடம் தமிழக தொழில் நிறுவன அமைப்பினர் மனு..

L Murugan

L Murugan

CODISSIA: ரயில்வே போன்ற அரசு நிறுவனங்கள் வருடத்திற்கு ஒருமுறை தொழில் நிறுவங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். ஆனால், அந்த ஒரு வருடத்தில் மூல பொருட்கள் விலை அதிகரிக்கும் போது 2 கோடி வரை நஷ்டம் சந்திக்கிறோம்

மூலப் பொருட்களின் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து  தமிழகத்தைச் சேர்ந்த, சிறு குறு தொழில் நிறுவன அமைப்புகளின் நிர்வாகிகள் டெல்லியில் மத்திய இணை அமைச்சர்கள் நாராயணன் ரானே மற்றும் எல்.முருகன் ஆகியோரை சந்தித்து மனு வழங்கினர்.

கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்க (கொடிசியா) தலைவர் ரமேஷ்பாபு, இந்திய தொழில் வர்த்தக சபை கோவை தலைவர் பாலசுப்ரமணியன், கோயமுத்துார் - திருப்பூர் மாவட்ட குறுந்தொழில்கள் சங்க (காட்மா) தலைவர் சிவக்குமார், தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந் தொழில்முனைவோர் சங்க (டேக்ட்) தலைவர் ஜேம்ஸ், தமிழ்நாடு கிரில் தயாரிப்பாளர்கள் சங்கம் பொருளாளர் சாகுல் ஹமீது, FISME அமைப்பின் காரியக் கமிட்டி உறுப்பினர் அருணாச்சலம் உள்ளிட்டோர் சந்தித்து மனு அளித்தனர்.

இந்த சந்திப்பின் போது தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இப்பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்றுமதியை நிறுத்து, இந்திய தொழில் அமைப்புகளின் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்த சந்திப்பை தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய கொடிசியா அமைப்பின் தலைவர் ரமேஷ்பாபு , "பெட்ரோல் மற்றும் டீசல் எப்படி விலை உயர்ந்து கொண்டே உள்ளதோ அதேபோல் மூல பொருட்களின் விலையும் அதிகரித்து கொண்டே செல்கிறது; இதனால் தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். இதேபோல், ரயில்வே போன்ற அரசு நிறுவனங்கள்  வருடத்திற்கு ஒருமுறை தொழில் நிறுவங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். ஆனால், அந்த ஒரு வருடத்தில் மூல பொருட்கள் விலை அதிகரிக்கும் போது 2 கோடி வரை நஷ்டம் சந்திக்கிறோம். பம்பு செட்கள் தயாரிக்கும் 60% நிறுவனங்கள் தங்கள் வேலையை குறைத்து கொண்டு விட்டனர்; உதாரணமாக 3 ஷிப்ட்-களில் வேலை பார்த்தவர்கள் இப்போது 1 ஷிப்ட்-ல் மட்டுமே வேலை பார்க்கும் அளவுக்கு வேலை குறைந்துள்ளது என்றார்.

Coddisia


மேலும், இரும்பு தாது மற்றும் எஃகு மூலப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை மத்திய இணை அமைச்சர்களிடம் முன்வைத்துள்ளோம்.
மேலும், அதிக வரி விதிப்பு காரணமாக மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவும் வழி இல்லை. வரியை குறைக்க வேண்டும்,  எல்லாவற்றையும் துறை சார்ந்த அமைச்சர்களுடன் எடுத்துறைத்துள்ளோம்.  நாங்கள் எதிர்பார்த்த கோரிக்கைகள் இதுவரையிலும் நிறைவேறவில்லை", எனவும் கூறினார்.

அரசாங்கம் தொழில் நிறுவனங்களுக்கு உரிய முறையில் உதவவில்லை என்றால் தொழில்நிறுவனங்கள் முற்றிலும் மூடப்படும் அபாயம் ஏற்படும்  எனவும் கொடிசியா அமைப்பின் தலைவர் ரமேஷ்பாபு தெரிவித்தார்.
Published by:Arun
First published:

Tags: Business, Coimbatore, L Murugan

அடுத்த செய்தி