பேப்பர் பாட்டிலுக்கு மாறும் கோகோ கோலா நிறுவனம் - இந்த சம்மரிலிருந்து அறிமுகம்!

பேப்பர் பாட்டிலுக்கு மாறும் கோகோ கோலா நிறுவனம் - இந்த சம்மரிலிருந்து அறிமுகம்!

மாதிரி படம்

கோகோ கோலா நிறுவனம் பிப்ரவரி 11 அன்று, ஒரு நிமிட குறுகிய வீடியோவை அதன் YouTube சேனலில் 'எங்கள் காகித பாட்டில் முன்மாதிரி - ஒரு படி முன்னோக்கிய பார்வையுடன்' என்ற தலைப்பில் ஷேர் செய்திருந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமை பற்றி உலகறியும். பிளாஸ்டிக்கில் பல வகைகள் இருந்தாலும் அந்த பிளாஸ்டிக்குகள் 90% உலகிற்கு தீங்கை தருவதுதான். அந்த வகையில் பலரும் விரும்பி அருந்தும் குளிர்பானமான Coca-Cola சமீபத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதை பற்றிதான் இந்த பதிவில் நாம் இப்போது காணப்போகிறோம். பிளாஸ்டிக் பயன்பாடு இயற்கையிலும் சுற்றுச்சூழலிலும் கடும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீர் மாசுபாடு முதல் நில மாசுபாடு வரை, பிளாஸ்டிக் கழிவுகள் எல்லா இடங்களையும் சீரழித்து வருகின்றன. 

பல நாடுகள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்துள்ளன அல்லது பொருத்தமான மாற்று வழிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்துள்ளன. இதே கருத்தை மனதில் கொண்டு, இப்போது குளிர்பான உற்பத்தியாளர் நிறுவனமான கோகோ கோலா ஐரோப்பாவில் 2030ம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்கான தனது பணியின் ஒரு பகுதியாக பேப்பர் பாட்டில்களை சோதனை முறையில் பயன்படுத்த தொடங்கியுள்ளது. 

ஒரு ஆன்லைன் சோதனை மூலம், டேனிஷ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, கோகோ கோலா நிறுவனத்தின் முதல் காகித பாட்டில் முன்மாதிரி இந்த கோடை காலத்தில் ஹங்கேரியில் கிடைக்கவுள்ளது. வலுவான காகித ஷெல்லிலிருந்து தயாரிக்கப்படும் இந்த பேப்பர் கவர், மறுசுழற்சி செய்யப்பட்ட பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) ஆல் உருவாக்கப்பட்ட மெல்லிய பிளாஸ்டிக் லைனரைக் கொண்டிருக்கும். 100 சதவிகிதம் மறுசுழற்சி செய்யக்கூடிய, பிளாஸ்டிக் இல்லாத பாட்டிலை உருவாக்குவதே நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள், இதன்மூலம் எந்தவொரு வாயுவும் தப்பிக்காமல் கார்பனேற்றப்பட்ட பானங்களை எவ்வித சேதமில்லாமல் வைக்கும் திறன் கொண்டதாம் இந்த பேப்பர். பிளாஸ்டிக் கழிவுகளுக்கு எதிராகவும், அதன் கார்பன் தடத்தை குறைப்பதற்கும், நிறுவனம் ஏற்கனவே பாட்டிலை சேகரித்து மறுசுழற்சி செய்ய முடிவு செய்துள்ளது.

Also read... UIDAI புதிய அப்டேட்: இப்போது mAadhaar செயலியில் 5 பேரின் சுயவிவரங்களை சேர்க்கலாம்!

கோகோ கோலா நிறுவனம் பிப்ரவரி 11 அன்று, ஒரு நிமிட குறுகிய வீடியோவை அதன் YouTube சேனலில் 'எங்கள் காகித பாட்டில் முன்மாதிரி - ஒரு படி முன்னோக்கிய பார்வையுடன்' என்ற தலைப்பில் ஷேர் செய்திருந்தது. கோகோ கோலா தனது காகித பாட்டில் முன்மாதிரியை ஐரோப்பாவின் சந்தைக்கு எடுத்துச் செல்லத் தயாராக உள்ளது என்றும், சில மாதங்களில், கோகோ கோலா பிரியர்கள்  நிறுவனத்தில் இருந்து வெளிவரும் முதல் பேப்பரால் தயாரிக்கப்பட்ட பானத்தை பெறுவார்கள் என்றும் தெரிவித்தது.

நாட்டின் மின்-மளிகை சில்லறை விற்பனையாளரான Kifli.hu ஆனது 2,000 பாட்டில்களை  AdeZக்கு வழங்கும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது. கோகோ கோலா ஒரு டேனிஷ் தொடக்க நிறுவனமான தி பேப்பர் பாட்டில் கம்பெனி (Paboco) உடன் இணைந்து பாட்டிலைத் தயாரித்துள்ளது, இது இன்னும் செயல்பாட்டில் உள்ளது. 2020 ஆம் ஆண்டில், பிரேக் ஃப்ரீ ஃப்ரம் பிளாஸ்டிக் என்ற தொண்டு நிறுவனம் உலகை பிளாஸ்டிக்கால் மாசுபடுத்தும் நிறுவனங்களில் கோகோ கோலாவை முதலிடத்திலும் அதைத் தொடர்ந்து பெப்சி மற்றும் நெஸ்லே உள்ளதாக கூறியிருந்தது. Coca-Cola போன்ற உலகெங்கிலும் கிளைகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் பிளாஸ்டிக் ஒழிப்பில் ஈடுபட்டால் நிச்சயம் ஒருநாள் பிளாஸ்டிக் இல்லா உலகம் சாத்தியப்படும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: