வணிகம் மற்றும் தொழில்துறையில் இந்தியாவின் மிகவும் மதிக்கத்தக்க விருதான, CNBC - TV18 தொலைக்காட்சியின் இந்திய தொழில் தலைவர் விருது (IBLA) வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.
தொழில்துறை மற்றும் வணிகத்துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வணிக தொலைக்காட்சியான CNBC - TV18 விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்த வகையில், நடப்பாண்டின் IBLA விருது நிகழ்ச்சி தொடங்கி நடந்து வருகிறது. ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட நாட்டின் முக்கிய தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சியில் தொழில் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “கொரோனா வைரஸால் தொழில் துறையினர் பீதி அடைய தேவையில்லை. அரசு மாற்று ஏற்பாடுகளை தயார் செய்து வருகிறது.
இந்தியாவில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர். சவுதி அரேபிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் மனநிலையில் உள்ளனர்.
ஜிடிபி எண்கள் இந்திய பொருளாதாரத்தின் நிலையிண்மையை காட்டுகிறது” என்று கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.