வணிகம் மற்றும் தொழில்துறையில் இந்தியாவின் மிகவும் மதிக்கத்தக்க விருதான, CNBC - TV18 தொலைக்காட்சியின் இந்திய தொழில் தலைவர் விருது (IBLA) வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
தொழில்துறை மற்றும் வணிகத்துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வணிக தொலைக்காட்சியான CNBC - TV18 விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்த வகையில், நடப்பாண்டின் IBLA விருது நிகழ்ச்சி இன்று நடந்தது. ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட நாட்டின் முக்கிய தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சியில், Iconic Business Leader of the Decade விருதை வென்ற முகேஷ் அம்பானி பேசுகையில், “எனக்கு இந்த அங்கீகாரம் அளித்ததற்கு நான் ஜூரிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் எனக்கான தலைவராக என்னுடைய அப்பா திருபாய் அம்பானிதான் இருந்து வருகிறார்.
எல்லாவற்றையும் பெரிதாக சிந்திப்பதற்கு எங்களுக்கு அவர் கற்றுக் கொடுத்துள்ளார். ரிலையன்ஸுக்காக, இந்தியாவுக்காக பெரிதாக சிந்திக்கக் கற்றுக் கொடுத்துள்ளார்.
இந்த மாலைப் பொழுதில் இந்த அங்கீகாரத்தை என்னுடைய அப்பாவுக்கு அர்பணிக்கிறேன். அவருடன் இணைந்து கடந்த 10 ஆண்டுகளில் ரிலையன்ஸ் இத்தகைய மாற்றத்துக்கு உழைத்த இளம் தலைவர்களுக்கு அர்பணித்துக் கொள்கிறேன்.
கடந்த நான்கு தசாப்தங்களில் ரிலையன்ஸை நீங்கள் உற்றுக் கவனித்தால், ஜவுளி உற்பத்தியில் தொழிலைத் தொடங்கி பெட்ரோலியத் துறைக்கு மாறி பின்னர் ஆற்றல் உற்பத்தி துறைக்கு மாறினோம். கடந்த தசாப்தத்தில் உலகத் தரம் வாய்ந்த சில்லறை தொழில்நுட்ப சாதனங்கள் உற்பத்திக்கு மாறினோம். வரும் தசாப்தம் இந்தியாவில் தொழில் துறையில் வரலாறு படைக்க வாய்ப்பு உள்ளதாக இருக்கும்” என்று கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.