CNBC-TV18 IBLA 2020: மறைந்த முன்னாள் நிதியமைச்சருக்கு 'Hall Of Fame' விருது...!

CNBC-TV18 IBLA 2020: மறைந்த முன்னாள் நிதியமைச்சருக்கு 'Hall Of Fame' விருது...!
  • News18
  • Last Updated: February 28, 2020, 8:33 PM IST
  • Share this:
வணிகம் மற்றும் தொழில்துறையில் இந்தியாவின் மிகவும் மதிக்கத்தக்க விருதான, CNBC - TV18 தொலைக்காட்சியின் இந்திய தொழில் தலைவர் விருது  (IBLA) வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

தொழில்துறை மற்றும் வணிகத்துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வணிக தொலைக்காட்சியான CNBC - TV18 விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த வகையில், நடப்பாண்டின் IBLA விருது நிகழ்ச்சி இன்று நடந்தது. ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட நாட்டின் முக்கிய தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.


பல்வேறு நிறுவனங்களுக்கு விருது வழங்கப்பட்ட நிலையில், மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு 'Hall Of Fame' விருது வழங்கப்பட்டது.

அருண் ஜெட்லியின் மனைவி இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

First published: February 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்