பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 155 புள்ளிகளும், நிப்டி 10,800 புள்ளியாகவும் உயர்வு

சந்தை நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 155.06 புள்ளிகள் உயர்ந்து 35,850.16 புள்ளியாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 44.45 புள்ளிகள் உயர்ந்து 10,771.80 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

Web Desk | news18
Updated: January 7, 2019, 5:06 PM IST
பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 155 புள்ளிகளும், நிப்டி 10,800 புள்ளியாகவும் உயர்வு
பங்குச் சந்தை
Web Desk | news18
Updated: January 7, 2019, 5:06 PM IST
அமெரிக்கா, சீனா என இரண்டு நாடுகளும் வர்த்தகப் போரை தவிர்ப்பதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் சந்தையை முடித்துக்கொண்டுள்ளன.

சந்தை நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 155.06 புள்ளிகள் உயர்ந்து 35,850.16 புள்ளியாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 44.45 புள்ளிகள் உயர்ந்து 10,771.80 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

மும்பை பங்குச்சந்தையில் ரியாலிட்டி, டெலிகாம், டெக், ஐடி, மின்சாரம், கட்டுமானம், வங்கி, ஆற்றல், எண்ணெய் & எரிவாயு, நிதி நிறுவனப் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கினர். மறுபக்கம் ஆட்டோமொபைல், தொழிற்சாலை, மெட்டல் உள்ளிட்ட துறை பங்குகளை அதிகளவில் விற்று இருந்தனர்.

லாபம் அளித்த டாப் 5 பங்குகள்

ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ், மாருதி, என்டிபிசி

நட்டம் அளித்த டாப் 5 பங்குகள்

பஜாஜ் ஆட்டோ, யெஸ் வங்கி, ஹீரோ மோட்டோ கார்ப், பஜான் ஃபினான்ஸ், சன் பார்மா
Loading...
ஜப்பானின் நிக்கி குறியீடு 2.82 சதவீதமும், ஹாங்காங்கின் ஷெங் 0.76 சதவீதமும் உயர்வுடன் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.95 சதவீதம் உயர்ந்து பேரல் 57.06 டாலராகவும், WTI கச்சா எண்ணெய் விலை 1.81 சதவீதம் உயர்ந்து 47.96 டாலராகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காலை நாணய சந்தையில் ரூபாய் மதிப்பும் உயர்வுடன் தொடங்கியது. ஆனால் முடிவில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மொத்தமாக 19 பைசா சரிந்து ₹69.81-ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க: மோசடிகள் மூலம் ₹41,000 கோடியை இழந்த வங்கிகள்
First published: January 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...