35,513.71 புள்ளிகளாக நிலைபெற்றது சென்செக்ஸ்!

ஆசிய சந்தையில் ஏற்பட்டுள்ள விற்பனை மோகம் அதிகரித்திருப்பது, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்றவை பங்குச்சந்தை சரிவுக்கான காரணங்களாக அமைந்துள்ளன.

news18
Updated: January 3, 2019, 7:33 PM IST
35,513.71 புள்ளிகளாக நிலைபெற்றது சென்செக்ஸ்!
மாதிரிப் படம்
news18
Updated: January 3, 2019, 7:33 PM IST
கார்ப்பரேட் வருவாய் அறிவிப்புகள் வெளிவர இருப்பதால் முதலீட்டாளர்கள் கவனமாகச் செயல்பட்டு வருவது, ஆசிய சந்தையில் ஏற்பட்டுள்ள விற்பனை மோகம் அதிகரித்திருப்பது, இந்திய ரூபாய் மதிப்புச் சரிவு போன்றவை பங்குச்சந்தை சரிவுக்கான காரணங்களாக அமைந்துள்ளன.

இன்றைய சந்தை நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 377.91 புள்ளிகள் உயர்ந்து 35,513.71 புள்ளியாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 120.25 புள்ளிகள் சரிந்து 10,672.25 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் டெலிகாம் துறையை தவிர ரியாலிட்டி, வங்கி, ஐடி, நிதி, வங்கி, கட்டுமானம், மின்சாரம், ஆட்டோமொபைல், மெட்டல், எண்ணெய் மற்றும் எரிவாயு என அனைத்துத் துறை சார்ந்த பங்குகள் நஷ்டத்தையே பதிவு செய்துள்ளன.

லாபம் அளித்த டாப் 5 நிறுவனங்கள்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயின்ட்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபம் அளித்துள்ளன.

நஷ்டம் அளித்த டாப் 5 பங்குகள்


மஹிந்தரா & மஹிந்தரா, ஓஎன்ஜிசி, வேதாந்தா, டாடா ஸ்டீல், எல்&டி
Loading...
மேலும் பார்க்க: குவியும் ‘மஞ்சப்பை’ ஆர்டர்கள் - குஷியில் திருப்பூர் உற்பத்தியாளர்கள்
First published: January 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...