பாஜகவின் வெற்றி உறுதியான பிறகும் பங்குச்சந்தை சரிவு - என்ன காரணம்?

இன்றைய சந்தை நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 298.82 புள்ளிகள் என 0.76 சதவீதம் சரிந்து 38,811.39 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 55.40 புள்ளிகள் என 0.47 சதவீதம் சரிந்து 11,682.50 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

news18
Updated: May 23, 2019, 3:56 PM IST
பாஜகவின் வெற்றி உறுதியான பிறகும் பங்குச்சந்தை சரிவு - என்ன காரணம்?
பங்குச்சந்தை
news18
Updated: May 23, 2019, 3:56 PM IST
இன்று காலை புதிய உச்சத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை குறியீடுகள் மாலை சரிந்தன. பாஜக வெற்றி உறுதியானால் பங்குச்சந்தை புதிய உச்சத்தைத் தொடுவது மட்டுமல்லாமல் லாபத்துடன் இன்றைய சந்தையை நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பாஜக வெற்றி உறுதி செய்யப்பட்ட அதே நேரம், பங்குச்சந்தை சரிவை நோக்கிச் சென்றது. இன்று காலை பங்குச்சந்தை தொடங்கிய உடன் சென்செக்ஸ் சில மணி நேரங்களில் 1,000 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து 40,124 புள்ளிகளைத் தொட்டது.

ஆனால், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் மற்றும் அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போர் உள்ளிட்டவை தான் இன்றைய சந்தையின் சரிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இன்றைய சந்தை நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 298.82 புள்ளிகள் என 0.76 சதவீதம் சரிந்து 38,811.39 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 55.40 புள்ளிகள் என 0.47 சதவீதம் சரிந்து 11,682.50 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

இருப்பினும், பிரதமர் மோடி மீண்டும் பதவிக்கு வந்த பிறகு, வரும் நாட்களில் சந்தை உயர்ந்து புதிய சாதனைகளைப் படைக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச்சந்தையை பொறுத்தவரையில் டெலிகாம், கட்டுமானம், மின்சாரம், வங்கி உள்ளிட்ட துறைகள் லாபத்துடன் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன. மறுபக்கம் ஆற்றல், எண்ணெய் மற்றும் எரிவாயு, நிதி டெக், ஐ.டி., மெட்டல் துறை பங்குகள் சரிந்துள்ளன.

இண்டஸ் இண்ட் வங்கி, ஹீரோ மோட்டோ கார்ப், கோல் இந்தியா, யெஸ் வங்கி, பவர் கிரிட் பங்குகள் இன்று அதிக லாபம் அளித்துள்ளன. மறுபக்கம் வேதாந்தா, ஐடிசி, டாடா மோட்டார்ஸ், எச்டிஎப்சி வங்கி, டாடா ஸ்டீல் பங்குகள் அதிக நட்டம் அளித்துள்ளன.
Loading...
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் இன்று காலை உயர்வுடன் தொடங்கியது. ஆனால் மாலை சந்தை முடியும் போது ரூபாய் மதிப்பு 19 பைசா சரிந்து 69.66 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.68 சதவீதம் குறைந்து 70.99 டாலர் பேரல் என்றும், WTI கச்சா எண்ணெய் விலை 2.78 சதவீதம் குறைந்து 70.99 டாலர் பேரல் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.​

மேலும் பார்க்க:
First published: May 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...