வருமான வரி விலக்கு வரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த வேண்டும்: சிஐஐ கோரிக்கை

சென்ற பட்ஜெட்டின் போது இந்திய தொழில் கூட்டமைப்பு அதிகபட்ச வருமான வரியான 30 சதவீதத்தை 25 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இருந்தது.

news18
Updated: January 9, 2019, 9:26 PM IST
வருமான வரி விலக்கு வரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த வேண்டும்: சிஐஐ கோரிக்கை
இந்திய தொழில் கூட்டமைப்பு
news18
Updated: January 9, 2019, 9:26 PM IST
2019 பட்ஜெட் அறிவிப்பில் வருமான வரி விலக்கு வரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும், வருமான வரிச் சட்டப்பிரிவு 80சி கீழ் அளிக்கப்படும் வரி விலக்கை 2.50 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

சென்ற பட்ஜெட்டின்போது இந்திய தொழில் கூட்டமைப்பு அதிகபட்ச வருமான வரியான 30 சதவீதத்தை 25 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இருந்தது.

இப்போது ஆண்டுக்கு 2.5 லட்ச ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் இருக்கும்போது வரி ஏதும் செலுத்த தேவையில்லை. இதுவே 2.5 லட்சம் முதல் 5 லட்சத்திற்குள் ஆண்டு வருமானம் இருந்தால் 5 சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும். 5 லட்சம் முதல் 10 லட்ச ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் இருக்கும்போது 20 சதவீதத்தை வரியாகச் செலுத்த வேண்டும். இதுவே 10 லட்ச ரூபாய்க்கும் கூடுதலாக ஆண்டு வருமானம் இருக்கும்போது அதில் 30 சதவீதத்தை வரியாகச் செலுத்த வேண்டும்.

“ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். 5 முதல் 10 லட்ச ரூபாய்  வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 10 சதவீத வரியும், 10 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலான ஆண்டு வருமான உள்ளவர்களுக்கு 20 சதவீத வரியும், 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் இருக்கும்போது 25 சதவீதத்தை வரியாகச் செலுத்துவது போல திருத்தங்கள் வேண்டும்.

கார்ப்ரேட் வரியையும் 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கலாம். குறைந்த கால மூலதன ஆதாயம் மீதான வரியை மட்டும் வைத்துக்கொண்டு, நீண்ட கால மூலதன ஆதாயம் மீதான வரியை நீக்க வேண்டும்” என்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

மேலும் படிக்க: ராகுல், சோனியா ரூ.100 கோடி வரி ஏய்ப்பு?

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...