கடன் பெறும் வாடிக்கையாளர்கள், கடந்த காலங்களில் கடனை எந்த அளவுக்கு முறையாக திருப்பிச் செலுத்தியுள்ளனர் என்ற வரலாற்றின் அடிப்படையில் சிபில் ஸ்கோர் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடன் பெறும் வாடிக்கையாளர் எந்த அளவுக்கு நம்பிக்கையானவர், கடனை திருப்பிச் செலுத்துவதில் அவரது திறன் என்ன என்பதையெல்லாம் இந்த ஸ்கோர் தெளிவுபடுத்துகிறது.
வாடிக்கையாளர் ஒருவர் கடன் பெற விண்ணப்பிக்கும் போது, வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகள், இந்த சிபில் ஸ்கோரை பார்த்து தான் கடன் வழங்கலாமா, வேண்டாமா என்பதை தீர்மானிக்கின்றன.
சிபில் ஸ்கோர் என்றால் என்ன?
300 முதல் 900 வரையிலான அளவில் 3 இலக்க எண்களைக் கொண்டிருப்பதே சிபில் ஸ்கோர் ஆகும். மிக அதிகமான ஸ்கோரை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்கள் மீதான நல்லெண்ணம் அதிகமாக இருக்கும். பொதுவாக 750 க்கு மேற்பட்ட ஸ்கோர் கொண்டிருப்பவர்களுக்கு கடன் திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.
குழந்தைகள் வங்கி கணக்கு ஓபன் செய்ய முடியுமா? ஒருவேளை செய்தால் என்னென்ன வசதிகள் கிடைக்கும் முழு விபரம்!
சிபில் ஸ்கோர் வரலாற்றை சோதனை செய்யும் போது, ஒரு நபர் கடந்த காலங்களில் யாருக்கேனும் கடனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றியுள்ளாரா என்பது தெரிய வரும். எத்தனை கடன் திட்டங்களை ஒருவர் பெற்றிருக்கிறார், எவ்வளவு தொகைக்கு கடன் பெற்றிருக்கிறார், அதற்கான காலக்கெடு எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் தெரிய வரும். இதை வைத்து, ஏமாற்றும் நபர்களை எடை போட்டு, இழப்புகளைத் தவிர்க்க வங்கிகளுக்கு இது உதவியாக இருக்கும்.
ஆன்லைனில் சிபில் ஸ்கோர் செக் செய்வது எப்படி
ஓராண்டுக்கு ஒருமுறை கட்டணமின்றி இலவசமாக நீங்கள் சிபில் ஸ்கோர் செக் செய்து கொள்ளலாம் மற்றும் அறிக்கை பெறலாம். இதை ஆன்லைன் மூலமாகவே செய்ய முடியும்.
- சிபில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு https://www.cibil.com/ செல்லவும்.
- கெட் யுவர் சிபில் ஸ்கோர் என்பதை தேர்வு செய்யவும்.
- இப்போது கிளிக் ஹியர் என்பதை கிளிக் செய்வதன் மூலமாக, கட்டணமின்றி இலவசமாக செக் செய்வதற்கான ஒற்றை வாய்ப்பை பெற முடியும்.
- உங்கள் பெயர், இ-மெயில் முகவரி, பாஸ்வேர்டு மற்றும் அடையாள அட்டை (பாஸ்போர்ட் நம்பர், பான் எண், ஆதார் அல்லது வோட்டர் ஐடி) ஆகியவற்றை குறிப்பிடவும்.
- பின்னர் பின்கோடு மற்றும் ஃபோன் நம்பர் ஆகியவற்றை உள்ளிடவும். அக்சப்ட் அண்ட் கண்டினியூ கொடுக்கவும்.
- பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அந்த எண்-ஐ கொடுக்கவும்.
- இப்போது டாஷ்போர்டு பகுதிக்குச் சென்று உங்கள் கிரெடிட் ஸ்கோரை செக் செய்யவும்.
- இப்போது அடுத்த தளத்திற்கு நீங்கள் ரீடாரக்ட் செய்யப்படுவீர்கள்.
- அங்கு லாகின் செய்வதன் மூலமாக, உங்கள் சிபில் ஸ்கோரை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
சேவிங்ஸ் அக்கவுண்டில் லட்சக்கணக்கில் பணம் இருக்கா? அதை பாதுகாக்க இதை தவறாமல் செய்யுங்கள்!
சிபில் ஸ்கோரை மேம்படுத்துவது எப்படி
- நீங்கள் ஏற்கனவே பெற்றிருக்கும் கடன் தொகையை உரிய தவணை முறையில் கால தாமதமின்றி முறையாக திருப்பிச் செலுத்த வேண்டும்.
- உங்கள் சிபில் ஸ்கோரில் 30 சதவீத அளவுக்கு மட்டுமே கிரெடிட் யுடிலைசேஷன் செய்ய வேண்டும்.
- செக்யூர்டு மற்றும் அன் செக்யூர்டு ஆகிய இரண்டு திட்டங்களிலும் கடன் பெற வேண்டும். உதாரணத்திற்கு கிரெடிட் கார்டு மூலம் கடன் பெறுவது அன் செக்யூர்டு கடன் திட்டம் ஆகும். வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்றவை செக்யூர்டு கடன் திட்டம் ஆகும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.