Home /News /business /

கடன் பெற சிபில் ஸ்கோர் முக்கியம்.. அதை இலவசமாக செக் செய்யலாம் தெரியுமா?

கடன் பெற சிபில் ஸ்கோர் முக்கியம்.. அதை இலவசமாக செக் செய்யலாம் தெரியுமா?

சிபில் ஸ்கோர்

சிபில் ஸ்கோர்

600க்கு கீழே இருந்தால் மிகவும் குறைவான ஸ்கோர் எனவும், 600-649 இருந்தால் குறைவு, 650- 699 ஒரளவிற்கு பரவாயில்லை எனவும், 750- 900 என மிகவும் நல்ல ஸ்கோர் என தெரிவிக்கப்படுகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் உள்பட மைக்ரோ பினாஸ் போன்றவற்றின் மூலம் கடன்களைப் பெற வேண்டும் என்றால் சிபில் ஸ்கோர் 700க்கு மேல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

    இன்றைக்கு கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும் பரவலாக கேட்கக்கூடிய வார்த்தைகளில் ஒன்றாக உள்ளது தான் சிபில் ஸ்கோர். அவசர தேவைக்காகக் கடன் வாங்கும் அனைவரிடம் வங்கி நிர்வாகம் அல்லது மைக்ரோ சிட் பன்ட் நிறுவனங்கள் அனைத்தும் உங்களின் சிபில் ஸ்கோரை செக் செய்த பிறகு தான், உங்களுக்குக் கடன் வழங்க முடியுமா? என்பதைத் தெரிவிப்போம் என்பார்கள். அது என்ன சிபில் ஸ்கோர்? இதற்கும் கடன் வழங்குவதற்கும் என்ன சம்பந்தம் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை என்றால் இங்கே முழுமையாக தெரிந்துக் கொள்வோம்.

    சிபில் ஸ்கோர் (CIBIL Score) என்றால் என்ன?

    சிபில் ஸ்கோர் என்பது கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ இந்தியா லிமிடெட் என்பதைக் குறிக்கிறது. ரிசர்வ் வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான இது, தனி நபர்களுக்கும் வணிகத்திற்கும் கூட கடன் அறிக்கைகள் மற்றும் மதிப்பெண்களை வழங்குகிறது.

    பெண்களுக்கான முதலீடு.. தங்கம் அல்லது ரியல் எஸ்டேட் எது பெஸ்ட்?

    நாம் பல இடங்களில் கடன்களை வாங்கியிருப்போம். சில நேரங்களில் இஎம்ஐ பணங்களைச் செலுத்துவதற்கு காலதாமதம் ஆகிவிடும். இதெல்லாம் சிபில் ஸ்கோர்களில் கணக்கிடப்படுகிறது. முந்தைய கடன்களை முறையாக செலுத்தும் போது எப்படி புதியதாக வாங்கும் கடன்களை செலுத்துவார்கள் என வங்கிகள் பலருக்கு நிராகரித்துவிடும். குறிப்பாக சிபில் ஸ்கோர் ஆனது 300 முதல் 900 வரை கணக்கிடப்படுகிறது.

    குறிப்பாக 600க்கு கீழே இருந்தால் மிகவும் குறைவான ஸ்கோர் எனவும், 600-649 இருந்தால் குறைவு, 650- 699 ஒரளவிற்கு பரவாயில்லை எனவும், 750- 900 என மிகவும் நல்ல ஸ்கோர் என தெரிவிக்கப்படுகிறது.

    கடன் வாங்கியவர்களை டார்ச்சர் செய்ய கூடாது..விதியை கடுமையாக்கிய ஆர்.பி.ஐ!

    எனவே நல்ல சிபில் ஸ்கோரைப் பெறுவதற்கு நீங்கள் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை குறைவாக வைத்திருப்பது, உரிய நேரத்தில் இஎம்ஐ செலுத்துவது, நிறைய கடன்கள் வாங்காமல் இருப்பது, தனிநபர் கடன்களை வாங்குவது தவிர்ப்பது போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிடில் உங்களது கிரெடிட் ஸ்கோர் மிகவும் குறைவாக இருக்கும். உங்களது சிபில் ஸ்கோரை நீங்களே ஆன்லைனில் செக் செய்துவிடலாம்..எப்படி? இதோ முழு விபரம்..

    CIBIL Score யை ஆன்லைனில் செக் செய்யும் முறை:

    1. https://www.cibil.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்திற்கு முதலில் செல்ல வேண்டும்.

    2. பின்னர் Get your CIBIL Score என்பதை கிளின் செய்யவும்.

    3. உங்கள் இலவச வருடாந்திர CIBIL ஸ்கோரைப் பெற (‘Click here’ to get your free annual CIBIL score) என்பதைக் கிளிக் செய்யவும்.

    4. இதனைத்தொடர்ந்து உங்கள் பெயர், மெயில் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். பின்னர் உங்களது பின் குறியீடு, பிறந்த தேதி மற்றும் தொலைப்பேசி எண் போன்றவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.

    5. பின்னர் Accept என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். தொடர்ந்து உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை உள்ளீடு செய்து continue என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

    6. இதில் go to dashboard என்பதைக் கிளிக் செய்து உங்களது கிரெடிட் ஸ்கோரைச் சரிபார்க்கலாம். இதனைத் தொடர்ந்து myscore.cibil.com என்ற இணையதளத்திற்குள் செல்லும். இதனைத் தொடர்ந்து ‘member login’ என்பதை கிளிக் செய்து உங்களது சிபில் மதிப்பெண்களை ஆன்லைனில் நீங்கள் காணலாம்..

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank Loan, Credit Card

    அடுத்த செய்தி