Home /News /business /

முகம் தெரியாத சாமியாரிடம் பங்குச்சந்தை ரகசியங்களை பகிர்ந்த NSE முன்னாள் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன்.. செபி விசாரணையில் அதிர்ச்சி

முகம் தெரியாத சாமியாரிடம் பங்குச்சந்தை ரகசியங்களை பகிர்ந்த NSE முன்னாள் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன்.. செபி விசாரணையில் அதிர்ச்சி

சித்ரா ராமகிருஷ்ணன்

சித்ரா ராமகிருஷ்ணன்

Chitra Ramkrishna: முகம் தெரியாத சாமியாரின் ஆலோசனைகளை ஏற்று ஆனந்த் சுப்பிரமணியத்திற்கு பல்வேறு சலுகைகளையும் ஊதிய உயர்வையும் தேசிய பங்கு சந்தையின் இயக்குநராக இருந்தபோது சித்ரா ராமகிருஷ்ணன் வழங்கியதும் செபி விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
    தேசிய பங்குச்சந்தையின் இயக்குநராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணன் தனது பணி காலத்தில் பங்கு சந்தையின் ரகசிய தகவல்களை முகம் தெரியாத சாமியாரிடம் பகிர்ந்ததும், அவரது உத்தரவின் கீழ் பணி நியமனங்களை வழங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தேசிய பங்கு சந்தையின் (NSE) முன்னாள் நிர்வாக இயக்குனராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணன், ஃபோர்ப்ஸ் இதழ் விருது உட்பட பல்வேறு சர்வதேச அங்கீகாரங்களை இவர் பெற்றுள்ளார். இந்நிலையில், பங்குச்சந்தை குறித்த ரகசிய தகவல்களை இவர் வெளியில் பகிர்ந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக செபி (SEBI) விசாரணை நடத்தியது. தற்போது விசாரணை தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    பங்குச்சந்தை துறையில் அவ்வளவாக யாருக்கும் தெரியாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை தலைமை திட்ட ஆலோசகராக சித்ரா ராமகிருஷ்ணன் நியமனம் செய்தார். பின்னர், பல முறை அவருக்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முகம் தெரியாத ஒரு சாமியாரின் உத்தரவுபடியே சித்ரா ராமகிருஷ்ணன் செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இமயமலையில் இருப்பதாக கூறப்படும் அந்த முகம் தெரியாத சாமியாரை சித்ரா ராமகிருஷ்ணன் நேரில் பார்த்தது இல்லை. இ.மெயில் மூலமாக அவரிடம் தொடர்பில் இருந்துள்ளார். சுமார் 20 ஆண்டுகள் அந்த சாமியாரிடம் தொடர்ப்பில் இருந்த சித்ரா ராமகிருஷ்ணன் அவரது  ஆலோசனையின் பேரிலேயே ஆனந்த் சுப்ரமணியத்தை தனக்கு அடுத்த இடத்தில் நியமித்துள்ளார்.

    இதையும் படிங்க: தங்கத்தின் விலை எப்போது குறையும்? எப்போது அதிகரிக்கும்? விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது..


    Balmer Lawrie நிறுவனத்தில் ஆனந்த் சுப்ரமணியம் கடைசியாக 15 லட்சம் ஊதியம் (அவரது கூற்றுப்படி) பெற்றுவந்த நிலையில், ஜனவரி 18, 2013 அனு தேசியச்பங்கு சந்தையின் தலைமை திட்ட ஆலோசகராக ஆண்டுக்கு 1.68 கோடி ரூபாய் ஊதியத்தில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மார்ச் 2014 இல், சித்ரா ராமகிருஷ்ணா , சுப்ரமணியனுக்கு 20 சதவீத ஊதிய அதிகரிப்புக்கு ஒப்புதல் அளித்தார். இதனால், அவரது சம்பளம் ரூ.2.01 கோடியாக மாற்றப்பட்டது. ஐந்து வாரங்களுக்குப் பிறகு, சுப்ரமணியனின் சம்பளம் மீண்டும் 15 சதவீதம் உயர்ந்துரூ.2.31 கோடியாக மாற்றப்பட்டது.

    ஆனந்த் சுப்ரமணியத்தின் செயல்பாட்டை  A+ (விதிவிலக்கானது) என்று  சித்ரா ராமகிருஷ்ணன் அழைத்தார். 2015 வாக்கில், அவரது ஊதியம்  ₹5 கோடியாக உயர்ந்தது, அவருக்கு சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு அடுத்ததாக ஒரு கேபின் வழங்கப்பட்டது மற்றும் முதல் தர சர்வதேச விமானப் பயணம் வழங்கப்பட்டது. இவை அனைத்தும் முகம் தெரியாத சாமியாரின் அறிவுறுத்தல்களின்படியே நடந்தன.

    மேலும் படிக்க: டாடா சன்ஸ் நிர்வாக தலைவராக சந்திரசேகரன் மீண்டும் தேர்வு... 5 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு


    சுப்பிரமணியத்துக்கு  வாரத்தில் 5 நாட்கள் வேலைக்கு பதிலாக மூன்று நாட்கள் வேலை வழங்கவேண்டும் என்றும் சாமியார் தனது இ.மெயிலில் தெரிவித்துள்ளார். இவை தவிர தேசிய பங்கு சந்தையின் ஐந்தாண்டுக் கணிப்புகள், நிதித் தரவு, ஈவுத்தொகை விகிதம், வணிகத் திட்டங்கள், வாரியக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் மற்றும் பணியாளர் செயல்திறன் மதிப்பீடுகள் குறித்தும் சாமியாரிடம் சத்ரா ராமகிருஷ்ணன் பகிர்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: NSE, Stock market

    அடுத்த செய்தி