கடந்த ஆண்டு வரை சீனாவின் மிகப்பெரும் கோடீஸ்வரராக விளங்கிய அலிபாபா குழும தலைவர் ஜாக் மாவின் சொத்து மதிப்பு தற்போது பாதியாக குறைந்துள்ளது. இது இயற்கையான சரிவு இல்லை என்றும் சீன அரசை எதிர்த்ததால் ஏற்படுத்தப்பட்ட நிலை என்றும் கூறுகின்றனர். ஜாக் மாவிற்கு இந்த நிலை ஏற்பட காரணம் தான் என்ன?
அலிபாபா என்ற நிறுவனத்தை தொடங்கி உலகம் முழுவதும் கிளைகளை பரப்பி மிகப்பெரும் தொழில் சாம்ராஜ்யத்தை கட்டமைத்தவர் சீனாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபராக விளங்கும் ஜாக் மா. இவர் உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களுள் ஒருவராக இருந்து வந்தார்.
அலிபாபா நிறுவனம், உலகின் மிகப்பெரும் ஃபிண்டெக் நிறுவனமாக விளங்குகிறது. ஒராண்டுக்கு முன்னர் வரை அமெரிக்க நிறுவனங்களான ஆப்பிள், அமேசான் மற்றும் கூகுளுக்கு அடுத்த பெரிய நிறுவனமாக அலிபாபா இருந்தது. இந்த குழுமத்தின் அலிபே தான் சீனாவின் மிகப்பெரும் ஆன்லைன் பேமெண்ட் தளமாகவும் இருந்து வந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் சீன அரசுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தற்போது ஜாக் மா, அவருடைய சொத்து மதிப்பில் பாதியை இழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
ஃபோர்ப்ஸ் இதழ் தகவலின்படி, கடந்த அக்டோபர் 2020-ல் அலிபாபா நிறுவனத்தின் சொத்து மதிப்பு $857 மில்லியனாக இருந்த நிலையில், தற்போது ஜூன் 2021 நிலவரப்படி $588 மில்லியனாக குறைந்துள்ளது. இதே போல இவருடைய ஆண்ட் குழும சொத்து மதிப்பு கடந்த அக்டோபர் 2020-ல் $470 மில்லியனாக இருந்தது, அது தற்போது வெறும் $108 மில்லியனாக குறைந்திருக்கிறது. இந்த இரு நிறுவனங்களின் கூட்டு மதிப்பீட்டின்படி கடந்த அக்டோபர் மாதம் $1326 மில்லியனாக இருந்த சொத்து மதிப்பு தற்போது பாதியாக குறைந்து $696 மில்லியனாக மாறியிருக்கிறது.

ஜாக் மா
ஜாக்மாவின் இந்த சரிவுக்கு காரணம் என்ன?
ஜாக் மா கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஷாங்காய் நகரில் நடைபெற்ற ஒரு நிதி தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்டபோது, சீன நிதி நிறுவனங்கள் மீது அரசு விதித்த கட்டுப்பாடுகள் குறித்து விமர்சித்து பேசினார், அதில் இது போன்ற கட்டுப்பாடுகளை விதிப்பவர்கள் பழமைவாதிகள் என எதிரான கருத்துக்களை தெரிவித்ததாக தகவல் கசிந்தது. இந்த மோதலை தொடர்ந்து அலிபாபா நிறுவனத்துக்கு பல்வேறு இடையூறுகளை சீன அரசு ஏற்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக ஆண்ட் நிறுவனத்தின் ஐபிஓ-வை சீன அரசு முடக்கியது.
Also Read:
நிம்மதியா சாப்பிட விடுங்கடா.. இணையத்தில் வைரலாகும் இளம்பெண் ரியாக்ஷன்
இதற்கிடையே ஜாக் மா திடீரென பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்தார். இதன் காரணமாக அவரை சீன அரசு வீட்டிலேயே முடக்கி வைத்திருப்பதாக வெளியான தகவல் சர்வதேச அளவில் சர்ச்சையானது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.