Home /News /business /

குழந்தைகள் ஈட்டும் வருமானத்துக்கும் வரி உண்டு... எப்படி கணக்கிடப்படுகிறது என்று தெரியுமா?

குழந்தைகள் ஈட்டும் வருமானத்துக்கும் வரி உண்டு... எப்படி கணக்கிடப்படுகிறது என்று தெரியுமா?

வருமான வரி

வருமான வரி

குழந்தைகள் ஈட்டும் வருமானம் அவர்களின் பெற்றோரின் வருமானத்துடன் சேர்க்கப்படும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இந்திய வருமான வரிச் சட்டப்படி வயது, ஒரு நிதியாண்டில் ஈட்டிய மொத்த வருமானம் என்று பலவித பிரிவுகளில் வருமான வரியின் விகிதங்கள் விதிக்கப்படுகிறது. அதேபோல ஒவ்வொரு விதமான வருமானத்திற்கும் வருமான வரியின் விகிதம் மாறும். பரிசு, லாட்டரி, பங்குகள் விற்பதன் மூலம் கிடைத்த லாபம் என்று ஒரு சில வருமானங்களுக்கு வரி விகிதம் மாறும்.

    மூத்த குடிமக்களுக்கு கூடுதல் விலக்குகள் உள்ளன. அதே போல, குழந்தைகள் பெறும் பரிசுகள், போட்டிகள் மூலம் வெல்லும் பணம், குழந்தைகள் பெயரில் முதலீடு செய்த தொகையில் இருந்து கிடைக்கும் வருமானம், விளம்பரம் மற்றும் திரைப்படங்களில் நடிக்கும் குழந்தைகள் ஈட்டும் வருமானம் ஆகியவற்றுக்கு வரி செலுத்த வேண்டுமா என்பது பலரின் சந்தேகமாக இருக்கிறது. 18 வயதுக்குட்பட்ட, மைனர் ஈட்டும் வருமானத்துக்கு வரி செலுத்தும் கடமை யாருடையது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    கடன் பெற சிபில் ஸ்கோர் முக்கியம்.. அதை இலவசமாக செக் செய்யலாம் தெரியுமா?

    18 வயதுக்குட்பட்ட மைனர்கள் ஈட்டும் வருமானம்

    குழந்தை ஈட்டும் எந்தவித வருமானமாக இருந்தாலும் அது இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

    * குழந்தை சம்பாதித்தது
    * குழந்தைக்கு பரிசாக கிடைத்தது

    குழந்தை தானாக சம்பாதித்து என்பது பார்ட் டைம் வேலை, வணிகத்தில் பங்கேற்றது, அல்லது வேறு ஏதேனும் வேலை செய்வதன் மூலமாக குழந்தை ஈட்டும் வருமானத்தைக் குறிக்கும். குழந்தை சம்பாதிக்காத தொகை என்பது நண்பர்கள், உறவினர்கள், போட்டிகள், ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட பரிசுத் தொகையைக் குறிக்கும்.

    குழந்தை ஈட்டிய வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டுமா?

    இந்திய வருமானவரி சட்டம் பிரிவு 64(1A) வின் கீழ் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஈட்டும் வருமானம் அவர்களின் பெற்றோரின் வருமானத்துடன் சேர்க்கப்படும். பெற்றோரின் வருமானத்துடன் குழந்தையின் வருமானத்தை சேர்த்த பின்பு, மொத்த தொகைக்கு ஏற்றார் போல வரி எவ்வளவு செலுத்த வேண்டும் என்று கணக்கிடப்பட வேண்டும்.

    அம்மா அப்பா இருவருமே சம்பாதிக்கும் பெற்றோராக இருந்தால் யாருடைய ஆண்டு வருமானம் அதிகமாக இருக்கிறதோ அவருடைய வருமான வரி கணக்கில் குழந்தையின் வருமானம் சேர்க்கப்படும். அதே நேரத்தில், அதிகபட்சம் இரண்டு குழந்தைகள் வரை தலா ஒரு குழந்தைக்கு ₹1500 என்ற வீதம் பெற்றோர்கள் குழந்தையின் வருமானத்தில் இருந்து வரி விலக்கு பெறலாம்.

    மைனர் குழந்தை வருமானத்திற்கான வரி விலக்கு

    18 வயதுக்கு உட்பட்டு வருமானம் ஈட்டும் குழந்தையின் அம்மா அப்பா இருவருமே இறந்துவிட்டார்கள், குழந்தைக்கு ஆதரவளிக்க யாரும் இல்லை என்ற பட்சத்தில் குழந்தையின் வருமானம் தனியாகத்தான் கணக்கிடப்படும்.

    காலாவதியான பாலிசிகளை மீட்க எல்.ஐ.சி தரும் அருமையான வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க!

    அதேபோல குழந்தைக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏதேனும் இருந்தால், வருமானவரி சட்டம் பிரிவு 80U வின் படி பெற்றோரின் வருமானத்துடன் குழந்தையின் வருமானம் சேர்த்துக் கொள்ளப்படாது. உடல் ரீதியான குறைபாடுகளில் 40% பாதிப்பு இருந்தாலே இந்த விலக்கு கிடைக்கும். காது கேளாமை, கண் பார்வை குறைபாடு, மனநல பாதிப்பு, கை அல்லது கால் இயங்காத தன்மை, போன்றவை இதில் அடங்கும்.

    மைனர் குழந்தையால் தானாக வரி கணக்கிட்டு, வருமான வரி தாக்கல் செய்ய முடியாது என்பதால், குழந்தையின் சார்பாக பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ செய்யலாம். அதே போல, குழந்தையின் சார்பாக, பெற்றோர் அல்லது பாதுகாவலர் குழந்தையின் பெயரில் PAN விண்ணப்பித்து, குழந்தை பெயரில் பயன்படுத்தலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Govt Scheme, Income tax, Savings

    அடுத்த செய்தி