தற்காலத்து குழந்தைகளுக்கு பணத்தின் மதிப்பு, நிதி மேலாண்மை மற்றும் பொருட்களை வாங்கும் திறன் பற்றி கற்பிப்பது மிகவும் அவசியமாகிறது. ஏனென்றால் முன்பெல்லாம் கேட்பதில் பாதி கூட குழந்தைகளுக்கு கிடைக்காது. ஆனால் இப்போது குழந்தைகள் கண்ணசைத்தால் போதும், உடனே பெற்றோர்கள் வாங்கி கொடுத்து விடுகிறார்கள்.இதனால் பணத்தின் அருமையை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
நியாயமான முறையில் செலவு செய்வது மற்றும் சேமிப்பு பற்றி எடுத்துரைப்பது குழந்தைகளிடையே நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு ஏதுவாக நாட்டின் பல முன்னணி வங்கிகள் குழந்தைகள் / மைனர்களுக்கான சேவிங் அக்கவுண்ட்ஸ்களை வழங்கி வருகின்றன. இப்போது நாம் எஸ்பிஐ வங்கியின் Pehla Kadam மற்றும் கனரா வங்கியின் Champ Deposit சேவிங் அக்கவுண்ட்ஸ்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.
ஹோம் லோனை சீக்கிரமாக முடிக்க வேண்டுமா? இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!
எஸ்பிஐ-யின் Pehla Kadam:
SBI தனது அதிகாரபூர்வ வெப்சைட்டில் குழந்தைகளுக்கு பணத்தை சேமிப்பதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள தனது Pehla Kadam மற்றும் Pehli Udaan திட்டம் உதவும் என்று குறிப்பிட்டுள்ளது. பணத்தின் 'வாங்கும் சக்தியை' (buying power) பரிசோதிக்கவும் குழந்தைகளை இத்திட்டம் அனுமதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அம்சங்கள்:
SBI-யின் Pehla Kadam மற்றும் Pehli Udaan அக்கவுண்ட்ஸ்களுக்கு மன்த்லி ஆவரேஜ் பேலன்ஸ் (MAB) தேவையில்லை. இது அதிகபட்ச இருப்பு உச்சவரம்பு (maximum balance ceiling) ரூ.10 லட்சத்துடன் வருகிறது. இந்த திட்டத்தில் சேரும் அக்கவுண்ட் ஹோல்டருக்கு வங்கியானது காசோலை புத்தகங்கள் மற்றும் ஃபோட்டோ ஏடிஎம் கார்டுகளை வழங்குகிறது. இந்த ஏடிஎம் கார்டில் பணம் எடுப்பது/பிஓஎஸ் வரம்பு ரூ.5,000-ஆகவும் ஒரு நாளுக்கான பரிவர்த்தனை வரம்பு ரூ.2,000-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Pehla Kadam என்பது எந்த வயதினிலும் உள்ள மைனர்களுக்கான பெற்றோருடன் சேர்ந்து தொடங்க கூடிய ஜாயின்ட் அக்கவுண்டாக இருக்கும் அதே நேரம் Pehli Udaan திட்டமானது 10 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கானது.
கனரா வங்கியின் Champ Deposit திட்டம்:
இந்த திட்டமானது 12 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கானது. இது குழந்தைகளுக்கான சேவிங் அக்கவுண்ட் என்பதால், இது ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஆகும். எனவே சராசரியாக குறைந்தபட்ச பேலன்ஸ் தொகையை பேணாவிட்டால் அபராதம் இல்லை. இந்த திட்டத்தின் கீழ் கனரா வங்கி செக்புக் வழங்கவில்லை. மேலும் இத்திட்டத்தின் கீழ் ஜாயின்ட் அக்கவுண்ட்ஸ்களை ஓபன் செய்ய முடியாது. இத்திட்டத்தில் சேரும் குழந்தை 18 வயதை எட்டிய பிறகு, இந்த வங்கிக் கணக்கு வழக்கமான சேமிப்பு கணக்காக மாற்றப்படும். Champ Deposit திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு வட்டி மீதான வரி பொருந்தாது. குழந்தைகளிடையே சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க கவர்ச்சிகரமான சேவிங்ஸ் பாக்ஸையும் கனரா வங்கி வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.25,000/- வரை காசோலைகள் / டிடி-க்களின் ஃப்ரீ கலெக்ஷன் குழந்தைக்கு பரிசாக வழங்கப்படும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Canara Bank, Savings, SBI