ஹோம் /நியூஸ் /வணிகம் /

செக் பவுன்ஸ் பற்றி புதிய கெடுபிடிகள் - இனி இஷ்டப்படி காசோலைகள் வழங்க முடியாது.!

செக் பவுன்ஸ் பற்றி புதிய கெடுபிடிகள் - இனி இஷ்டப்படி காசோலைகள் வழங்க முடியாது.!

செக் பவுன்ஸ்

செக் பவுன்ஸ்

Cheque Bounce Rule | பெரும்பாலும் வங்கிக்கணக்கில் போதுமான தொகை இருப்பு இல்லை என்றால் செக் பவுன்ஸ் ஆகும். ஆனால் இதற்கு வேறு சில காரணங்களாலும் செக் ரிட்டர்ன் செய்யப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்து வந்தாலும், காசோலைகள் அதாவது செக் என்பது இன்னும் பயன்பாட்டில் தான் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காசோலை தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பணம் எடுக்க வேண்டும், பணம் டெபாசிட் செய்ய வேண்டும், மற்றவரிடம் பேமெண்ட் பெற வேண்டும் அல்லது கொடுக்க வேண்டும் என்று எல்லா வங்கி பரிவர்த்தனைகளுக்கும் காசோலைகள் தான் புழக்கத்தில் இருந்தது. காசோலைகளை நீங்கள் வங்கியிடம் சமர்ப்பிக்கும் பொழுது ஒரு சில காரணங்களுக்காக காசோலை நிராகரிக்கப்படும்.

இது தான் செக் பவுன்ஸ் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் வங்கிக்கணக்கில் போதுமான தொகை இருப்பு இல்லை என்றால் செக் பவுன்ஸ் ஆகும். ஆனால் இதற்கு வேறு சில காரணங்களாலும் செக் ரிட்டர்ன் செய்யப்படும். என்னதான் ஆன்லைன் பரிவர்த்தனைகள், யூபிஐ, QR ஸ்கேன் என்று நவீனமாக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வந்தாலும் தற்போதுமே பெரிய பெரிய தொகைகளுக்கு காசோலைகள் தான் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், பல்வேறு காரனங்களுக்காக செக் பவுன்ஸ் தொடர்ந்து காணப்படுகின்றன. செக் பவுன்ஸ் பற்றிய புதிய விதிமுறைகளை அரசாங்கம் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு நபர் காசோலை வழங்கி, அவர் வழங்கிய காசோலை பவுன்ஸ் ஆகி விட்டால் அவருக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது பற்றி நிதி அமைச்சகம் கூறி வருகிறது. சமீபத்தில் நடந்த உயர்மட்ட சந்திப்பில் இதை பற்றிய விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக ஒரு குறிப்பிட்ட வங்கியில் இருந்து ஒரு நபர் அளித்த செக் பவுன்ஸ் ஆகி விட்டால், அவருடைய வேற கணக்குகளில் இருக்கும் தொகையை பயன்படுத்தலாம்; அதுமட்டுமில்லாமல் அவருக்கு புதிய வங்கி கணக்குகள் திறப்பதற்கு தடை விதிக்கப்படும் போன்றவை பரிசீலனையில் உள்ளது.

பொதுவாக, கணக்கில் பணம் இல்லாமல் செக் பவுன்ஸ் ஆவது என்பது ஒரு சட்டப்படி குற்றம். நீங்கள் ஒரு நபருக்கு அளித்து, அது செக் பவுன்ஸ் ஆகி விட்டால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். அதே போல உங்களுக்கு அளித்த செக் கணக்கில் தொகை இல்லாமல் பவுன்ஸ் ஆகி விட்டால் நீங்கள் காசோலை கொடுத்தவரின் மேல் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அமல்படுத்த இருக்கும் புதிய விதிகளின்படி, சட்டப்படியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு வேறு காசோலை வழங்கியவரின் வேறு கணக்குகளிலிருந்து தொகையை பெறுவதற்கான விதிமுறையை அமல்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Also Read : கேஷ்பேக் கிரெடிட் கார்டு வாங்கப் போறீங்களா.? மறக்காமல் இதை மட்டும் ஃபாலே பண்ணிடுங்க.!

எல்லா நபர்களுக்கும் CIBIL ஸ்கோர் மிகவும் முக்கியமானது. நீங்கள் வாங்கிய கடனுக்கு தவணைகளை சரியான முறையில் திருப்பி செலுத்த வேண்டும், கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் அதற்கு உரிய தொகையை சரியாக செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல விதங்களில் ஒரு நபரின் கிரெடிட் ஸ்கோர் நிர்ணயிக்கப்படும். தற்போது செக் பவுன்ஸ் ஆனால், அந்த காசோலை வழங்கிய நபர்களுக்கு அவர்களுடைய கிரெடிட் ஸ்கோர் உடன் அதை இணைக்கலாம் என்ற யோசனையும் பரிசீலனையில் இருக்கிறது. எனவே ஒரு நபர் அளித்த செக் பவுன்ஸ் ஆகி விட்டால் அந்த பரிவர்த்தனை எதிர்மறையான பரிவர்த்தனையாக கணக்கிடப்பட்டு, CIBIL ரிப்போர்ட்டில் இணைக்கப்படும்!

இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டால், செக் வழங்குபவர்கள் அலட்சியமாக இருக்க மாட்டார்கள். அது மட்டுமல்லாமல் எல்லா செக் பவுன்ஸ் நிகழ்வுகளுமே நீதிமன்றம் வரை எடுத்து செல்ல வேண்டிய தேவை ஏற்படாது என்றும் கூறப்படுகிறது. கணக்கில் பணமே இல்லாமல் செக் தருகிறேன் என்று இனி ஏமாற்ற முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read : இந்த 3 டிப்ஸ்களை மட்டும் ஃபாலோ செய்யுங்கள்.. உங்கள் சிபில் ஸ்கோர் எகிறும்!

திடீரென்று ஏன் புதிய விதிகளை உடனடியாக அமல்படுத்த இருக்கிறார்கள் என்ற கேள்வி எழும்பலாம்! நாடு முழுவதுமே செக் பவுன்ஸ் என்று 35,00,000 வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது. எனவே உச்ச நீதிமன்றம் ஒரு கமிட்டியை உருவாக்கி இதனை உடனடியாக கவனிக்க வேண்டும், அனைத்து செக் பவுன்ஸ் வழக்குகளும் சரிபார்க்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Banks, Central government