Home /News /business /

உலக அளவில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் சென்னை தான் டாப் - சர்வதேச ஆய்வு தகவல்

உலக அளவில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் சென்னை தான் டாப் - சர்வதேச ஆய்வு தகவல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சம்பந்தப்பட்ட நகரங்களின் செலவு மற்றும் தரத்தை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    எலக்ட்ரானிக்ஸ் துறை சார்ந்த முதலீடுகளை மேற்கொள்ள உலகின் செலவு குறைவான நகரம் என்ற பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

    அந்நிய நேரடி முதலீடுகளை மேற்கொள்ள உலகின் செலவு குறைந்த நகரம் என்ற பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

    பினான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னைக்கு முதலிடம் கிடைத்துள்ளது.fDi Intelligence என்ற இதழ் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில், எலக்ட்ரானிக்ஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை(R&D) உருவாக்க உலகின் செலவு குறைந்த நகரங்களில் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

    இரண்டாவது இடத்தை மலேசியாவின் பெனாங்கு நகரம் பிடித்துள்ளது. இந்தியாவின் குர்கான் மூன்றாவது இடத்தையும் புனே நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.

    சம்பந்தப்பட்ட நகரங்களின் செலவு மற்றும் தரத்தை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 2000 சதுர மீட்டரில் 50 பேர் கொண்ட ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தை அமைக்க ஆகும் செலவு இதில் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கணக்கின்படி, 1.24 மில்லயன் டாலர் என்ற மதிப்பில் உலக அளவில் மிகக் குறைவான செலவு கொண்ட நகரமாக சென்னை உள்ளது.இரண்டாம் இடத்தில் உள்ள பெனாங்கில் 1.32 மில்லியன் டாலர் செலவு எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க - சாலை விபத்து உயிரிழப்புகளில் இந்தியா முதலிடம்... மத்திய அமைச்சர் நதின் கட்கரி வேதனை

    மேலும், எலக்ட்ரானிக்ஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதில் போட்டி வாய்ந்த நகரங்கள் பட்டியலில் உலக அளவில் சென்னை இரண்டாம் இடத்தில் உள்ளது. தென் கொரியாவின் சியோல் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. பெங்களூரு, புனே, குர்கிராம் ஆகிய நகரங்கள் முறையே ஆறு, ஏழு, எட்டு ஆகிய இடங்களை பிடித்துள்ளன.

    இந்தியாவின் எல்க்ட்ரானிக்ஸ் தயாரிப்பில் தமிழ்நாடு 20 சதவீதம் பங்களிப்பை தருகிறது. சாம்ஸ்சங், எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் சென்னையில் இயங்கி வருகின்றன. சாம்ஸ்சங், ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் சென்னையில் எல்க்ட்ரானிக்ஸ் பொருள்கள் உற்பத்தியில் ஈடுபட்டுவருகின்றன.

    மாநிலத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் காலகட்டத்தில் மாநிலத்தில் அந்நிய நேரடி முதலீடு 41.5 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் அன்மையில் மேற்கொண்ட துபாய் பயணத்தில் ரூ.6,000 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் மாநில அரசு புதிய ஆராய்ச்சி மட்டும் மேம்பாட்டு கொள்கையை வெளியிடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai

    அடுத்த செய்தி