ஹோம் /நியூஸ் /வணிகம் /

வாரக்கடைசி நாளான இன்று குறைந்த தங்கத்தின் விலை.. எவ்வளவு தெரியுமா?

வாரக்கடைசி நாளான இன்று குறைந்த தங்கத்தின் விலை.. எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை

தங்கம் விலை

GOLD RATE : நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் (22 காரட்) 37,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ரூ.160 குறைந்து 37,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

    வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் சரிந்துள்ளது.

    தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.  ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

    அந்த வகையில், நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் (22 காரட்) 37,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ரூ.160 குறைந்து 37,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 4,650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Read More: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதோ..!

    மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.61.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    Published by:Srilekha A
    First published:

    Tags: Gold, Gold Price, Gold rate