ஹோம் /நியூஸ் /வணிகம் /

ரூ.5,000-ஐ நெருங்கும் ஒரு கிராம் தங்கத்தின் விலை.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

ரூ.5,000-ஐ நெருங்கும் ஒரு கிராம் தங்கத்தின் விலை.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை அதிகரிப்பு

தங்கம் விலை அதிகரிப்பு

Gold rate | மீண்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40,000ஐ நெருங்குவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஒரு கிராம் தங்கம் ரூ.5000-ஐ நெருங்குவதால் நகைபிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.  அதிலும் சில நாட்கள் சவரனுக்கு ரூ.37,000 வரை விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து வந்தனர். ஆனால் தற்போது ஒரு சவரன் தங்கம் 40 ஆயிரம் ரூபாயை நெருங்குவதால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

  அந்த வகையில், நேற்று ஒரு சவரன் தங்கம் 39,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ரூ.8 உயர்ந்து ரூ.39,528 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 4,941 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  இதையும் படிங்க | தினமும் ரூ.417 முதலீடு செய்தால் போதும்... ரூ.1 கோடி வரை முதிர்வுத் தொகை பெறலாம்!

  இந்த நிலையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலையே தொடர்ந்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50 காசுகளுக்கும்,  ஒரு கிலோ வெள்ளி 68,500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Gold Price, Gold rate