ஹோம் /நியூஸ் /வணிகம் /

Gold rate : அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!

Gold rate : அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை

தங்கம் விலை

Gold rate | மீண்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.39,000ஐ நெருங்குவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.  அதிலும் சில நாட்கள் சவரனுக்கு ரூ.37,000 வரை விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து வந்தனர்.

    அந்த வகையில், நேற்று ஒரு சவரன் தங்கம் 38,070 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ரூ.456 உயர்ந்து ரூ.38,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று கிராமுக்கு 57 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 4,815 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதையும் படிங்க | பர்சனல் லோன் வாங்கும் ப்ளான் இருக்கா? முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க!

    இந்த நிலையில் வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் அதிகரித்து ரூ.67.40 காசுகளுக்கும்,  கிலோவுக்கு ரூ.700 உயர்ந்து 67,400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Gold, Gold Price, Gold rate