Home /News /business /

Gold Rate: ஒரே நாளில் இவ்வளவு குறைந்ததா தங்கம் விலை... சவரன் ரூ.38,000 கீழ் சென்றது

Gold Rate: ஒரே நாளில் இவ்வளவு குறைந்ததா தங்கம் விலை... சவரன் ரூ.38,000 கீழ் சென்றது

தங்க நகை 
Image: PradeepGaurs / Shutterstock.com

தங்க நகை Image: PradeepGaurs / Shutterstock.com

Gold Silver Rate today: தங்கம் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில், தற்போது தங்கம் விலை சரிந்து ஆறு வாரங்களுக்கு முந்தைய விலைக்கு விற்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 352 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த மாதம் ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

    நேற்று ஒரு சவரன் தங்கம் 38 ஆயிரத்து 32 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், செப்டம்பர் மாதத்தின் முதல் நாளான இன்று 352 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 44 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 710 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    இதேபோன்று வெள்ளி ஒரு கிராம் 2 ரூபாய் குறைந்து 58 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 58 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில், தற்போது தங்கம் விலை சரிந்து ஆறு வாரங்களுக்கு முந்தைய விலைக்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Gold Price, Gold rate

    அடுத்த செய்தி