ஹோம் /நியூஸ் /வணிகம் /

Gold Rate: தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்றைய நிலவரம்

Gold Rate: தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்றைய நிலவரம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Gold Silver Rate: கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 4,625 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.  ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

    அந்த வகையில், நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ. 36,880க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ரூ.120 உயர்ந்து 37,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 4,625 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 70 பைசா குறைந்து ரூ.62க்கும்,  கிலோவுக்கு 700 ரூபாய் உயர்ந்து, 62,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Gold Price, Gold rate