Home /News /business /

ரூ.38,000க்கும் கீழ் குறைந்த தங்கத்தின் விலை.. எவ்வளவு தெரியுமா?

ரூ.38,000க்கும் கீழ் குறைந்த தங்கத்தின் விலை.. எவ்வளவு தெரியுமா?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Gold Silver Rate: ஒரு சவரன் தங்கம் 38 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் குறைந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.38,000-க்கும் கீழ் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.  ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் 3வது முறையாக இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

    அந்த வகையில், நேற்று ஒரு சவரன் தங்கம் 37,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ரூ.80 குறைந்து 37,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 4,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ALSO READ | அதிரடி கட்டண உயர்வு.. ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் 26ம் தேதி அமைச்சர் ஆலோசனை

    இந்த நிலையில் வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 20 பைசா அதிகரித்து ரூ.62.40 காசுகளுக்கும்,  கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து, 62,400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Gold, Gold Price, Gold rate

    அடுத்த செய்தி