ஹோம் /நியூஸ் /வணிகம் /

Gold Rate: தங்கம், வெள்ளி விலை குறைந்தது... எவ்வளவு தெரியுமா?

Gold Rate: தங்கம், வெள்ளி விலை குறைந்தது... எவ்வளவு தெரியுமா?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Gold Silver Rate: தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று சற்று குறைந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்கள் தங்கம் வாங்குவது அதிகரித்தது. தீபாவளி பண்டியைகையொட்டி ரூ.25 ஆயிரம் கோடிக்கு தங்கள், வெள்ளி ஆகியவற்றின் விற்பனை இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது பண்டிகை தினங்கள் முடிந்த நிலையில், தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்றது.

    இந்நிலையில்,  ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமும் ரூ.30 குறைந்து ரூ.4705க்கும் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ. 37,640க்கும் விற்பனை ஆகி வருகிறது.  இதேபோல் வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.0.70 குறைந்து ரூ.63க்கும் கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.63,000க்கு விற்பனை ஆகி வருகிறது.

    18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.3854க்கும் சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.30,832க்குவிற்பனை ஆகி வருகிறது.

    Published by:Murugesh M
    First published:

    Tags: Gold Price, Gold rate, Silver