உங்கள் பங்கீடு இல்லையென்றாலும் PF கணக்கில் உங்களால் தொடர்ந்து சம்பாதிக்க முடியுமா? விவரங்கள் உள்ளே!

உங்கள் பங்கீடு இல்லையென்றாலும் PF கணக்கில் உங்களால் தொடர்ந்து சம்பாதிக்க முடியுமா? விவரங்கள் உள்ளே!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி

ஊழியர்கள் தங்கள் வேலை இழந்தவர்களாக இருக்க வேண்டும் அல்லது வேறு வேலைக்கு சென்றிருக்க வேண்டும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள் குறைந்தபட்சம் மாத சம்பளம் ரூ.15,000-துடன் தனியார் துறையில் பணிபுரிந்தால், அவர்களுக்கு பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கை திறக்க உரிமை உண்டு. இருப்பினும், ஈபிஎஃப் பணத்தை திரும்ப பெறுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அதாவது, ஊழியர்கள் தங்கள் வேலை இழந்தவர்களாக இருக்க வேண்டும் அல்லது வேறு வேலைக்கு சென்றிருக்க வேண்டும். ஆனாலும், மக்கள் பலர் வேலை இழப்பு அல்லது வேலை மாறுதலுக்குப் பிறகு தங்கள் ஈபிஎஃப் கணக்கை பார்க்காமல் விட்டுவிடுவதால், அவை உரிமை கோரப்படாமல் அப்படியே விடப்பட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன.

வரி மற்றும் முதலீட்டு நிபுணர்களின் கூற்றுப்படி, ஈபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் நபர் தனக்கு 58 வயதாகும் வரை அவரது ஈபிஎஃப் கணக்கு தொடர்ந்து சம்பாதிக்கிறது என்று கூறியுள்ளனர். ஒருவரின் ஈபிஎஃப் கணக்கு ஈபிஎஃப் வட்டி சம்பாதிப்பதன் மூலம் இது நிகழ்கிறது. ஒருவரின் ஈபிஎஃப் கணக்கில் ஈபிஎஃப் வட்டி கடன் விதி குறித்து பேசிய SEBI பதிவு செய்யப்பட்ட வரி மற்றும் முதலீட்டு நிபுணர் ஜிதேந்திர சோலங்கி, “வேலை இழப்புக்குப் பிறகு அல்லது வேலை மாற்றம் காரணமாக ஈபிஎஃப் இருப்பு உரிமை கோரப்படாமல் இருப்பது கவனிக்கப்பட்டது.

இருப்பினும், ஈபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் நபர்களின் கவனத்திற்கு, ஈபிஎஃப் கணக்கில் ஈபிஎஃப் பங்களிப்பு இல்லாதபோது கூட ஒருவரின் ஈபிஎஃப் கணக்கு தொடர்ந்து சம்பாதிக்கிறது. எனவே, ஒருவர் தனது வேலையை இழந்து நிதி நெருக்கடியை எதிர்கொண்டால், pf பணத்தை எடுப்பது அவரது கடைசி விருப்பமாக இருக்க வேண்டும். ஈபிஎஃப் பணத்தை திரும்பப் பெறுவதற்கு பதிலாக வேறு வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும். இதை செய்வதன் மூலம், ஒருவரின் ஓய்வூதிய நிதியை அப்படியே வைத்திருக்க முடியும். மேலும் ஈபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர் சம்பாதிக்காதபோது கூட உங்களது நிலுவைத் தொகை தொடர்ந்து சம்பாதிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Also read... Gold Rate | சவரனுக்கு ரூ. 128 உயர்ந்தது தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம் என்ன?

ஈபிஎஃப் திரும்பப் பெறுவதைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, அதே ஈபிஎஃப் கணக்கை புதிய நிறுவனத்திலும் தொடருமாறு ஈபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, டிரான்ஸெண்ட் கன்சல்டன்ஸின் செல்வ மேலாண்மை முகாமைத்துவ இயக்குநர் கார்த்திக் ஜாவேரி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "வேலை மாறுதல் விஷயத்தில், ஒருவரின் ஈபிஎஃப் கணக்கை புதிய தேர்வாளரிடம் அதாவது புதிதாக வேளைக்கு சேர்த்த நிறுவனத்துடன் சேர்ப்பது நல்லது. ஒருவரின் ஈபிஎஃப் கணக்கு இபிஎஸ் (EPS - Earnings Per Share) நன்மையையும் அளிப்பதால் ஈபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர் ஓய்வூதிய நன்மைக்கு தகுதியுடையவராக இருக்க இது உதவும்.

ஒருவரின் ஈபிஎஃப் கணக்கை குறைந்தபட்சம் 20 ஆண்டுகளாக தொடர்ந்து பராமரிக்கும் ஊழியர்களுக்கு இந்த இபிஎஸ் நன்மை வழங்கப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். ஒருவருக்கு இபிஎஸ் கணக்கு நன்மை எவ்வாறு வருகிறது மற்றும் இந்த இபிஎஸ் கணக்கில் செல்வம் எவ்வாறு கிடைக்கிறது என்பதை பற்றி ஜாவேரி தெரிவித்தாவது, "ஈபிஎஃப்ஓ விதிமுறைகளின்படி, ஒரு ஊழியர் அவரது அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை ஈபிஎஃப் பங்களிப்பாக அவரது கணக்கில் பங்களிப்பார். மேலும் ஆட்சேர்ப்பு செய்த நிறுவனமும் அதே பங்களிப்பை அவரது ஈபிஎஃப் கணக்கில் வழங்குவர். இருப்பினும், நிறுவனத்தின் பங்களிப்பான 12 சதவீதத்தில், 8.33 சதவீதம் இபிஎஸ் கணக்கில் சேர்க்கிறது. மீதமுள்ள 3.67 சதவீதம் இபிஎஃப் கணக்கில் சேர்க்கிறது” எனக் கூறியுள்ளார்.

ஈபிஎஃப் கணக்கு செயலில் இருக்கும்போது மட்டுமே மேற்கூறிய விதிகள் செயல்படும் என்று ஜாவேரி மற்றும் சோலங்கி இருவரும் கூறியுள்ளனர். இருப்பினும், ஈபிஎஃப் கணக்கு செயலற்ற நிலையில் இருந்தால், அதாவது வேலை இழப்புக்கு பிறகு ஊழியரோ அல்லது ஆட்சேர்ப்பு செய்பவர்களோ ஈபிஎஃப் கணக்கில் பங்களிக்க மாட்டார்கள். அவ்வாறான நிலையில், ஈபிஎஃப்ஒ அறிவித்த வருடாந்திர ஈபிஎஃப் வட்டி விகிதத்தை, உங்கள் ஈபிஎஃப் நிலுவைத் தொகைக்கு ஏற்ப உங்களால் பெற முடியும். மேலும் ஈபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர் தனக்கு 58 வயதாகும் வரை நிலுவை தொகைக்கான வட்டியை சம்பாதிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
First published: