ஹோம் /நியூஸ் /வணிகம் /

ரூ.5200ஐ நெருங்கும் ஒரு கிராம் தங்கம்.. அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை!

ரூ.5200ஐ நெருங்கும் ஒரு கிராம் தங்கம்.. அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை!

தங்கம் விலை

தங்கம் விலை

Gold rate | புது வருடம் பிறந்த நிலையில், நகைபிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது நகையில் விலை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.42 ஆயிரத்தை நெருங்குவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று சவரனுக்கு ரூ. 41,200ஆக இருந்த தங்கத்தின் விலை, இன்று ரூ.328 உயர்ந்து ரூ.41,528க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.41 அதிகரித்து ரூ.5,191க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 அதிகரித்து ரூ.75.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 அதிகரித்து ரூ.75,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையே தொடர்ந்தால் இந்த வருடம் முடிவதற்குள் தங்கம் விலை கிராமிற்கு 6000 ரூபாயைத் தாண்டும் என கூறுகிறார்கள் வல்லுனர்கள். இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

First published:

Tags: Gold Price, Gold rate