ஹோம் /நியூஸ் /வணிகம் /

ரூ.5200ஐ தாண்டிய ஒரு கிராம் தங்கம்.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்! தங்கம் வெள்ளி இன்றைய நிலவரம்!

ரூ.5200ஐ தாண்டிய ஒரு கிராம் தங்கம்.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்! தங்கம் வெள்ளி இன்றைய நிலவரம்!

தங்கம்

தங்கம்

Gold rate | புது வருடம் பிறந்த நிலையில், நகைபிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது நகையில் விலை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai [Madras]

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.42 ஆயிரத்தை நெருங்குவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று சவரனுக்கு ரூ. 41,528ஆக இருந்த தங்கத்தின் விலை, இன்று ரூ.136 உயர்ந்து ரூ.41,664க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.17 அதிகரித்து ரூ.5,208க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 50  காசுகள் குறைந்து ரூ.75க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையே தொடர்ந்தால் இந்த வருடம் முடிவதற்குள் தங்கம் விலை கிராமிற்கு 6000 ரூபாயைத் தாண்டும் என கூறுகிறார்கள் வல்லுனர்கள். இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

First published:

Tags: Gold Price, Gold rate