முகப்பு /செய்தி /வணிகம் / ITR சமர்ப்பிக்கும் முன் 26AS படிவத்தை சரிபாருங்கள்!

ITR சமர்ப்பிக்கும் முன் 26AS படிவத்தை சரிபாருங்கள்!

வரி

வரி

படிவம் 26AS இல் சம்பளம், நிலையான வைப்பு நிதியின் வட்டி, மூலதன ஆதாயங்கள் போன்ற வருமான வழிகள் மற்றும் வரிகள் போன்ற விவரங்கள் இருக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

FY 2021-22 அல்லது AY 2022-23க்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 2022 ஜூலை 31 ஆகும். ஜூலை 31, 2022க்குப் பிறகு ஐடிஆர் தாக்கல் செய்தால் ₹5,000 வரை தாமதக் கட்டணத்தைச் செலுத்த வேண்டி வரும்.

ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதிக்காகக் காத்திருக்காமல், காலக்கெடுவுக்கு முன்பே படிவம் 26AS சரிபார்க்கவும். அதில் ஏதேனும் தவறான தகவல்கள் இருந்தால், அதைக் குறிப்பிட்ட தேதிக்கு முன் சரிசெய்து விட்டு , பின்னர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று வரி நிபுணர்கள் தெரிவிகின்றனர். படிவம் 26AS இல் உள்ள பிழையை எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்து பார்ப்போம்.

வருமான வரி விலக்கு பிரிவுகள் இனி நம் விரல் நுனியில்!

படிவம் 26AS இல் சம்பளம், நிலையான வைப்பு நிதியின் வட்டி, மூலதன ஆதாயங்கள் போன்ற வருமான வழிகள் மற்றும் வரிகள் போன்ற விவரங்கள் இருக்கும். இதற்கு முன்னால் தாக்கல் செய்யப்பட்ட வரிப் பிடித்தம் ,ரிட்டன் விவரங்களில் ஏதேனும் பிழை இருந்தால் , 26AS தவறான விவரங்களைப் பிரதிபலிக்கும். வரி செலுத்துபவர் எப்போதும் 26AS இல் வழங்கப்பட்ட இந்தத் தகவலைச் சரிபார்த்து, தவறான அறிக்கைகள் இருந்தால் இந்தத் தரவைத் தகுந்த ஆதாரங்களுடன் சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

உங்கள் படிவம் 26AS இல் ஏற்படக்கூடிய பொதுவான பிழையைப் பற்றி Taxbuddy.com இன் நிறுவனர் சுஜித் பங்கர் பேசுகையில், "படிவம் 26AS விவரங்கள் காலாண்டு அடிப்படையில் புதுப்பிக்கப்படும். மேலும் ITR ஐ தாக்கல் செய்யும் போது படிவம் 26AS இல் பிரதிபலிக்கும் கிரெடிட்களை மட்டுமே நீங்கள் கோர முடியும்.

வரி செலுத்துபவர்கள் 26AS அறிக்கையை தவறாமல் சரிபார்க்க வேண்டும். ஏதேனும் பிழை இருந்தால் தாக்கல் செய்யப்பட்ட டிடிஎஸ் அறிக்கையில் புதுப்பிப்பதற்கான கோரிக்கையை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என்றால், விரைவில் டிடிஎஸ் அறிக்கையை .சரி செய்து தாக்கல் செய்யுமாறு கோரவும்.

நீங்களே உங்கள் ITR-1 படிவத்தை சமர்ப்பிக்கலாம் வாருங்கள்! எளிய வழிமுறை இதோ

சில நேரங்களில் நீங்கள் முன்கூட்டிய வரி அல்லது சுய மதிப்பீட்டு வரி போன்ற வரிகளை செலுத்தி இருப்பீர்கள். ஆனால் அது 26AS இல் பிரதிபலிக்காது. PAN அல்லது AY ஐ தவறாக உள்ளிட்ட பல காரணங்களால் இது நிகழ்கிறது.

சில சமயங்களில் டிஜிட்டல் தகவல்களை TIN இல் பதிவேற்ற வங்கி மறந்துவிட்டாலும் இது நிகழும். இந்த பிழையை சரி செய்ய, நீங்கள் மாற்றுவதற்கான கோரிக்கையுடன் சலானை இணைத்து மதிப்பீட்டு அதிகாரிக்கு எழுதலாம்.

CIN ஐத் தாங்கிய சலான் TIN இல் பதிவேற்றப்பட்டதா என்பதைச் சரிபார்க்க, TIN இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள Challan நிலை விசாரணை வசதியைப் பயன்படுத்தலாம்.

விபரங்களையும், சரி பார்த்த பின்னர் ITR ஐ பதிவிடுவது நல்லது. அதிகமாக அல்லது தவறான வரி செலுத்துவதை தவிர்க்கும்.

First published:

Tags: Business, Income tax, Indian economy, Personal Finance