• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்பாட்டில் மாற்றம் : 16-ஆம் தேதி முதல் அமலில்..!

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்பாட்டில் மாற்றம் : 16-ஆம் தேதி முதல் அமலில்..!

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஸ்வைப் மெஷின் மேல் வைத்தால், பாஸ்வேர்ட் இல்லாமல் பணம் எடுக்கும் ஆப்ஷனை வாடிக்கையாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

  • Share this:
    கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்பாட்டை பாதுக்காப்பானதாக மாற்ற, வரும் 16ம் தேதி முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

    கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி 15-ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.

    கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகளின் வசதிகளை மேம்படுத்தும் விதமாக Transit Access Pass என்ற நடைமுறையை கார்டு நிறுவனங்கள் அறிமுகம் செய்தன.

    இதில், கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகளை, ஸ்வைப் மெஷின் மேல் வைத்தால் போதும், உடனடியாக பாஸ்வேர்ட் எதுவும் இல்லாமல் பணம் எடுத்து கொள்ளப்படும். இந்த நடைமுறை மூலம் 2 ஆயிரம் ரூபாய் வரை பாஸ்வேர்ட் இல்லாமல் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகளில் இருந்து எடுக்க முடியும். பாஸ்வேர்ட் இல்லாமல் பணம் எடுக்கும் நடைமுறைக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், ஜனவரி 15-ஆம் தேதி கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகளின் பாதுகாப்பை வங்கிகள் உறுதி செய்யும்படி ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.

    இதன்படி, ஒரு வாடிக்கையாளர் தனது கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுக்கு என்ன வகையான சேவைகள் வேண்டும் என்பதை தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கூறியது. இந்த நடைமுறை வரும் 16-ஆம் தேதி முதல் அமலுக்கு வர வேண்டும் என ரிசர்வ் வங்கி தனது சுற்றறிக்கையில் கூறியுள்ளது.

    இதன்படி, ஒருவர் தனது கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டில், ஆன்லைனில் பயன்படுத்தும் வசதி, வெளிநாடுகளில் பயன்படுத்தும் வசதி மற்றும் பாஸ்வேர்ட் இல்லாமல் பணம் எடுத்து கொள்ளும் வசதிகள் வேண்டுமா இல்லையா என்பதை வாடிக்கையாளர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

    டெபிட் மற்றும் கிரெடிட் கார்டில், வங்கிகள் பணம் எடுக்க அனுமதித்துள்ள வரம்பிற்குள், ஏ.டி.எம்மில் எவ்வளவு பணம் எடுக்கலாம், ஸ்வைப் மெஷினில் எவ்வளவு பணம் செலுத்தலாம், வெளிநாடுகளில் எவ்வளவு பணம் எடுக்கலாம் என்ற வரம்பையும் வாடிக்கையாளர்களே தனித்தனியாக நிர்ணயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

    மார்ச் 16 முதல் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகளை வழங்கும் போது, அவை, இந்தியாவில் உள்ள ஏடிஎம் மற்றும் ஸ்வைப் மெஷின்களின் மட்டுமே பயன்படுத்தமுடியும் வகையில் இருக்கும். ஆன்லைனில் கூட பயன்படுத்த முடியாது. ஆன்லைனில் பணம் செலுத்தக்கூட அதற்கான சேவையை பெற வேண்டும்.

    இந்த வசதிகளை ஒரு வாடிக்கையாளர் தேவைப்படும்போது பயன்படுத்தி விட்டு, மீண்டும், இந்த வசதிகளை எப்போது வேண்டுமானாலும் கார்டுகளில் இருந்து நீக்கி விடலாம்.

    தற்போது பயன்பாட்டில் இருக்கும் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கும் இந்த நடைமுறை மார்ச் 16 முதல் அமலுக்கு வரும்.

    ஒருவேளை, தற்போது பயன்படுத்தி வரும் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகளை ஒரு முறைகூட ஆன்லைன் பயன்பாட்டிற்கோ அல்லது பாஸ்வேர்ட் இல்லாமல் டேப் செய்யும் வசதியிலோ பயன்படுத்தவில்லை என்றால், 16ஆம் தேதி முதல் இந்த வசதிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: