• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ரூ.3,250 கோடி கடன் மோசடி வழக்கு; சந்தா கோச்சாருக்கு அமலாக்கத்துறை சம்மன்

ரூ.3,250 கோடி கடன் மோசடி வழக்கு; சந்தா கோச்சாருக்கு அமலாக்கத்துறை சம்மன்

சந்தா கோச்சர்

சந்தா கோச்சர்

வீடியோகான் குழுமத்திற்கு ஐசிஐசிஐ வங்கி 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்கியதில் முறைகேடு எனத் தொடரப்பட்ட வழக்கில், சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஐசிஐசிஐயின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

வீடியோகான் குழுமத்திற்கு ஐசிஐசிஐ வங்கி 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்கியதில் முறைகேடு எனத் தொடரப்பட்ட வழக்கில், சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

மேலும், சந்தா கோச்சாருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் சுற்றறிக்கை அனுப்பியது. இதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள சந்தா கோச்சார், வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர்.

இருவரின் வீடுகளிலிருந்து ஆவணங்கள், மின்னணு சான்றுகள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கைப்பற்ற ஆவணங்களைச் சரிபார்த்து அதன் விபரங்களை இருவரிடமும் கேட்டுப் பெறுவதற்காக இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடன் முறைகேடு தொடர்பான ஆவணங்களைச் சந்தா கோச்சார் அழித்த குற்றச்சாட்டு தொடர்பாகவும் விசாரணையை நடைபெறுகிறது.

மேலும் பார்க்க:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilarasu J
First published: