ஹோம் /நியூஸ் /வணிகம் /

Make A Dent போட்டி : ரூ.17 லட்சத்தில் பரிசுகளை வெல்லும் வாய்ப்பு - படைப்பாளர்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!

Make A Dent போட்டி : ரூ.17 லட்சத்தில் பரிசுகளை வெல்லும் வாய்ப்பு - படைப்பாளர்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!

Make A Dent

Make A Dent

Make A Dent | இந்த ஆண்டு, மொத்தம் ₹17 லட்சம்* மதிப்புள்ள ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன! எனவே, சமூகத்தில் சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்திய ஒருவரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தால், அந்தக் கதையை வெளிச்சம் போட்டு உலகத்துடன் பகிர்ந்துகொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சமுதாயத்தை நல்ல நிலைக்கு மாற்ற நாம் மேற்கொள்ளும் ஒரு சிறிய செயலும் நீண்டக் காலத்திற்குப் பேசப்படும். இது வாழ்க்கையை மாற்றுவது மட்டுமல்லாமல், உத்வேகங்களைத் தூண்டி மில்லியன் கணக்கான மக்களை ஊக்குவிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. அந்தச் சிறிய செயலுக்கு வேகமாகப் பரவி இயக்கமாக மாறும் சக்தியும் உண்டு. தெருவோர விலங்குகளுக்கு உணவளிப்பது முதல் பின்தங்கிய குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பது வரை எந்தவொரு முயற்சிக்கும் அதற்குரிய அங்கீகாரம் கிடைத்தே தீரும். இப்போது, சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் இந்தச் சிறிய செயல்களுக்கு அங்கீகாரமும் வெகுமதியும் வழங்கப்படும் நேரம் வந்துவிட்டது!

2021ஆம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, News18 உடன் இணைந்து,"Make A Dent" போட்டியுடன் Happydent மீண்டும் வந்துள்ளது! இந்த முயற்சியானது ஒரு சிறந்த செயலை உலகிற்குத் தெரிவிக்கும் குறிக்கோளுடன் சிறந்த குடிமகனை அடையாளம் காண்பதற்கான பத்திரிக்கைப் போட்டியை நடத்துகிறது. டிசம்பர் 29, 2022 இல் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு நடைபெறும் இந்தப் போட்டி, சமூகத்தில் அரிய செயல்களைச் செய்து மாற்றத்தைக் கொண்டு வந்த நபர்களைப் பற்றிய கதைகளைச் சமர்ப்பிக்க பங்கேற்பாளர்களைக் கேட்கும். அத்தகையச் செயல்கள் தொடர்பான உள்ளீடுகளை  இங்கே மற்றும் Instagram இல் படம் அல்லது வீடியோ வடிவத்தில் பதிவேற்றலாம். இந்த உள்ளீடுகள் ஒவ்வொன்றும் நடுவர்கள் குழுவால் மதிப்பிடப்படும், மேலும் முதல் 10 உள்ளீடுகளுக்கு மொத்தமாகச் சேர்த்து 17 லட்சம்* வரையிலான ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு, Make A Dent நாடு முழுவதிலுமிருந்து 2600 வீடியோ உள்ளீடுகளைப் பெற்றது. இதில் பங்கேற்பாளர்கள் Happydent ஸ்மைலைப் பயன்படுத்தி குப்பை கொட்டுதல், பெட்ரோல் நிலையங்களில் செல்போன்கள் அல்லது சிகரெட்களைப் பயன்படுத்துதல் மற்றும் மாதவிடாய் தொடர்பான தடைகள் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கொண்டு வந்தனர். McCann Worldgroup Asia நிறுவனத்தின் தலைவர் பிரசூன் ஜோஷி தலைமையிலான நடுவர் மன்றம், McCann Worldgroup India நிறுவனத்தின் CEO மற்றும் COO மற்றும் Perfetti Van Melle India நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ராமகிருஷ்ணன் ஆகியோர் பல சுற்று விவாதங்களுக்குப் பிறகு இந்த உள்ளீடுகளை மதிப்பீடு செய்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு, மொத்தம் ₹17 லட்சம்* மதிப்புள்ள ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன! எனவே, சமூகத்தில் சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்திய ஒருவரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தால், அந்தக் கதையை வெளிச்சம் போட்டு உலகத்துடன் பகிர்ந்துகொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

போட்டியில் பங்கேற்பதற்கான விதிமுறைகளும் நிபந்தனைகளும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. உங்கள் உள்ளீடுகளை அனுப்புவதற்கு முன் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள microsite தளத்தைப் பார்வையிடுங்கள்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:

உங்கள் உள்ளீடுகளை படம் அல்லது வீடியோ வடிவில் சமர்ப்பிக்கலாம்.

இன்ஸ்டாகிராமில் #MakeADent என்ற ஹேஸ்டேகைப் பயன்படுத்தி @CNNNews18 மற்றும் @happydentind ஆகியவற்றை டேக் செய்து உங்கள் உள்ளீட்டை ஒரு கதை / இடுகையாக பதிவேற்றுங்கள். உங்கள் பதிவை நேரடியாக எங்கள் microsite <url> இல் பதிவேற்றலாம்.

வீடியோக்களை சமர்ப்பிப்பவர்களுக்கான சில குறிப்புகள்:

கேம்பைன் micrositeயில் உங்கள் வீடியோவைப் பதிவேற்றினால் அதன் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ ஒரு சுருக்கமான Happydent ஸ்லேட்டைச் சேர்க்க வேண்டும். உங்கள் வீடியோவில் எளிதாக இணைக்கக்கூடிய ஸ்லேட் டெம்ப்ளேட்டை microsite வலைப்பக்கத்திலிருந்துப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Instagram வழியாக தங்கள் உள்ளீடுகளைச் சமர்ப்பிக்கும் பயனர்கள் கேம்பைன் Instagram ஃபில்டரைப் பயன்படுத்த வேண்டும். முதல் சில வினாடிகளுக்கு ஃபில்டரைப் பயன்படுத்தி, அதன் பிறகு பயனர் அவர்களின் இயல்பான (தங்கள் விருப்பத்தின்படி ஃபில்டர் செய்துகொள்ளலாம்) பயன்முறைக்கு மாறலாம். போட்டியின் ஹேஷ்டேக்கைக் குறிப்பிட்டு @CNNNews18 மற்றும் @happydentind ஆகியவற்றை டேக் செய்ய மறந்துவிடாதீர்கள்.

உங்கள் உள்ளீடுகளைச் சமர்ப்பிக்கும் முன், ரொக்கப் பரிசை வெல்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், விதிமுறைகள் மற்றும் செய்ய வேண்டியவை & செய்யக்கூடாதவை ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள இந்தத் தளத்தைப் பார்வையிடவும்.

தொடங்கும் முன் தெரிந்துகொள்ள சில குறிப்புகள்:

  படங்களைச் சமர்ப்பிக்கும் பயனர்கள் எந்தவொரு ஃபில்டரையும் பயன்படுத்தத் தேவையில்லை.

  இன்ஸ்டாகிராமில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து உள்ளீடுகளிலும் ஹேஷ்டேக்குகள் குறிப்பிடப்பட்டு, குறிப்பிட கணக்குகள் டேக் செய்யப்பட்டிருக்க வேண்டும்

  வீடியோவின் கால அளவு 5-7 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.

 பட்டியல் செய்யப்பட்ட உள்ளீடுகளில் இருந்து 10 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

 * முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு முறையே ரூ. 5 லட்சம், ரூ. 3 லட்சம், மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

மீதமுள்ள 7 வெற்றியாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.

உலகைச் சிறந்த இடமாக மாற்றுவதற்குத் தயாராக உள்ளீர்களா?

வாங்க, தொடங்கலாம்!

திக்கா பட்டிச்சி & பனா டால் வீடியோ அச்சி சி!

First published:

Tags: Tamil News