மோசடிகளைக் குறைக்க ரிசர்வ் வங்கியுடன் இணைந்து புதிய திட்டம் தீட்டும் மத்திய அரசு!

எந்த ஒரு மோசடியாக இருந்தாலும், தரவு திருட்டாக இருந்தாலும் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

Tamilarasu J | news18
Updated: January 5, 2019, 5:21 PM IST
மோசடிகளைக் குறைக்க ரிசர்வ் வங்கியுடன் இணைந்து புதிய திட்டம் தீட்டும் மத்திய அரசு!
ரிசர்வ் வங்கி முத்திரை
Tamilarasu J | news18
Updated: January 5, 2019, 5:21 PM IST
வங்கிகளில் நடைபெறும் 1 லட்சம் ரூபாய் மதிப்பிற்கும் குறைவான மோசடிகளைத் தடுக்க ரிசர்வ் வங்கியுடன் இணைந்து மத்திய அரசு செயல்பட உள்ளது எனத் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

தரவு திருட்டு, சமுக வலைத்தளங்களில் நடைபெறும் மோசடிகளைக் கட்டுப்படுத்த நிதி தரவு பாதுகாப்புச் சட்டம் ஒன்றையும் மத்திய அரசு வரையறுத்துள்ளது. தற்போது வங்கிகள், ரிசர்வ் வங்கியுடன் இணைந்து 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய மோசடிகளை மட்டும் டிராக் செய்து வருகின்றன.

“எந்த ஒரு மோசடியாக இருந்தாலும், தரவு திருட்டாக இருந்தாலும் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவான மதிப்புடைய மோசடிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். பேஸ்புக் தரவு திருட்டு மீதும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

நிதி மட்டும் இல்லாமல் இணையத்தில் ஏற்படும் அனைத்து மோசடிகளும் இந்த நிதி தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கண்காணிக்கப்படும். உலகம் முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே அவற்றைத் தடுக்கத் தக்க நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது” என்றும் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறினார்.

மேலும் பார்க்க: ராட்சத பலூன் கண்காட்சி... இப்போது சென்னையில்
First published: January 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...