ஹோம் /நியூஸ் /வணிகம் /

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

 பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

இந்த விலை குறைப்பின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6ம் குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. அந்தவகையில், உக்ரைன்-ரஷ்யா போர் சூழலால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்தது.

  அதன்படி, டீசல் விலை வரலாறு காணாத உச்சமாக ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது. எரிபொருட்களின் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.

  இதனால், நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. விலைவாசி உயர்வை தாங்கிக்கொள்ள முடியாமல் மக்கள் திணறி வந்தனர். தொடர்ந்து, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமா என எதிர்பார்த்து காத்திருந்தனர்.

  இந்நிலையில், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6ம் குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6ம் குறைக்கப்படுகிறது. கலால் வரி குறைப்பால் பெட்ரோல் மீது ரூ.9.50ம், டீசல் மீது ரூ.7ம் விலை குறையும்.

  இந்த விலை குறைப்பின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Nirmala Sitharaman, Petrol Diesel Price