விதிகளை மீறும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!

ஊரடங்கினால் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியவாசிய பொருட்களை விற்பனை செய்ய ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

விதிகளை மீறும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!
மாதிரி படம்
  • Share this:
அத்தியாவசியமல்லாத எந்த பொருளையும் விநியோகிக்கக் கூடாது என்று ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20-ம் தேதி முதல் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கினால் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியவாசிய பொருட்களை விற்பனை செய்ய ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆன்லைன் வணிக நிறுவனங்களான ப்ளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது சேவையை தொடர்ந்து வழங்கி வந்தது. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் முறையின்றி தேவையற்ற பொருட்களையும் விற்பனை செய்வதாக புகார் எழுந்தன.


இதையடுத்து அத்தியாவசியமில்லாத எந்த பொருளையும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் விநியோகிக்க கூடாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.








First published: April 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading