தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்?

இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது.

Web Desk | news18
Updated: May 20, 2019, 9:18 PM IST
தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்?
அரசு அலுவலகம்
Web Desk | news18
Updated: May 20, 2019, 9:18 PM IST
தமிழக வணிகவரித்துறையில் ஜூன் 1-ம் தேதி முதல் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதாகவும், மத்திய அரசு ஊழியர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது முதல் வணிக வரித்துறையில் மறுசீரமைப்பு செய்ய உள்ளதாகத் தமிழக அரசு கூறிவந்தது.

இந்நிலையில் ஜூலை 1 முதல் அதற்காக பணிகள் நடைபெற உள்ளதாகவும், 6 கூடுதல் ஆணையர்கள் பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தமிழக வணிக வரித் துறையில் கூடுதல் ஆணையர்கள் மட்டுமல்லாமல் இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் மாநில வரி அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களும் புதியதாக உருவாக்கப்படுகின்றன.

இப்படி புதியதாக உருவாக்கும் பல முக்கிய அதிகாரிகள் பதவிகளுக்கு அவுட் சோர்சிங் முறையில் மத்திய அரசு ஊழியர்கள் நிரப்பப்பட உள்ளனர். இவர்கள் தனியார் அலுவலகங்களில் வேலை பார்க்கும் அவுட்சோர்சிங் பணியாளர்கள் போன்று, மத்திய அரசின் கீழிருந்து தமிழக அரசு அலுவலகத்தில் பணிபுரிவார்கள்.

ஆனால் எவ்வளவு காலங்களுக்கு இந்த பணியில் அமர்த்தப்படுவார்கள், இதனால் தமிழக அரசு அதிகாரிகளின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுமா என்ற விவரங்கள் தெரியவில்லை.

மேலும் பார்க்க:
Loading...
First published: May 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...