முகப்பு /செய்தி /வணிகம் / தொலைத்தொடர்பு உபகரணங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

தொலைத்தொடர்பு உபகரணங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தொலைத்தொடர்புத் துறையில் 15 வகையான உபகரணங்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகிய காரணங்களால், இந்தியப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்றுமதியைவிட இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு அதிகரித்துள்ளதால், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4 விழுக்காடாக உள்ள நடப்பு கணக்கு பற்றாக்குறை 3 விழுக்காடாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில், தொலைத்தொடர்புத் துறை பொருட்கள் மீதான இறக்குமதி வரி இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது, தொலைத்தொடர்பு நிலையங்கள், டிஜிட்டல் உபகரணங்கள் உள்ளிட்ட 15 வகையான பொருட்களுக்கு இறக்குமதி வரி 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. இது இன்று அமலுக்கு வந்துள்ளது. மொபைல் போன்களுக்கு மட்டும் வரி உயர்த்தப்படவில்லை. ஏற்கனவே, 19 வகையான வீட்டு உபயோகப் பொருட்களுக்கான இறக்குமதி வரி, கடந்த மாதம் 26-ம் தேதி உயர்த்தப்பட்டது. இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது முறையாக இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

First published:

Tags: Central govt, Import tax, Increased import tax, Telecommunications