பான் கார்டு ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நீட்டிப்பு!

இதுவரை பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

news18
Updated: April 1, 2019, 1:22 PM IST
பான் கார்டு ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நீட்டிப்பு!
பான் ஆதார் இணைப்பு
news18
Updated: April 1, 2019, 1:22 PM IST
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

வங்கி மற்றும் மொபைல் எண் வாங்க ஆதார் எண் தேவையில்லை என்ற கூறிய உச்ச நீதிமன்றம், பான் கார்டுக்கு ஆதார் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. எனவே பான் கார்டுடன் ஆதார் எண்ணை 2019 மார்ச் 31-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது வந்தது.

இந்நிலையில் மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை 2019 செப்டம்பர் 30 வரை நீட்டிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

என்ன இருந்தாலும் வருமானவரி தாக்கல்செய்ய வேண்டும் என்றால் பான் கார்டு ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக உள்ளது. வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் 2019 செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்தால் போதும்.

ஜம்மு காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்குப் பான் கார்டு, ஆதார் எண் இணைப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க:
First published: April 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...