Home /News /business /

சமூக வலைதளங்களில் பொருட்களை விளம்பரப்படுத்தும் பிரபலங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு

சமூக வலைதளங்களில் பொருட்களை விளம்பரப்படுத்தும் பிரபலங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு

சமூக வலைத்தளம்

சமூக வலைத்தளம்

Social Media Influencers | இன்ஃப்ளூயன்சர்கள் மூலம், சோஷியல் மீடியா என்பது மிகப்பெரிய மார்கெட்டிங் துறையாகவே மாறிவிட்டது. சிறிய பொருட்கள் சேவைகள் முதல், பெரிய வணிக நிருவனங்கள் வரை, தங்களது பிராண்டுகளுக்கு சமூக வலைத்தள பிரபலங்களை, பிராண்டின் முகமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சமூக வலைத்தளத்தில் ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கில் ஃபாலோவர்கள் இருப்பவர்கள் ஏதேனும் ஒரு பொருளை அல்லது சேவையை விளம்பரம் செய்யும் பொழுது அதை பார்த்து பலரும் அந்த பொருளை வாங்குவார்கள். அதற்கு கணிசமான ஒரு தொகையும் இலவசமாக பொருளும் வழங்கப்படும். அந்த வகையில், சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பலரும் லட்சக்கணக்கில் சம்பாதிக்க தொடங்கி விட்டனர்.

இன்ஃப்ளூயன்சர்கள் மூலம், சோஷியல் மீடியா என்பது மிகப்பெரிய மார்கெட்டிங் துறையாகவே மாறிவிட்டது. சிறிய பொருட்கள் சேவைகள் முதல், பெரிய வணிக நிறுவனங்கள் வரை, தங்களது பிராண்டுகளுக்கு சமூக வலைத்தள பிரபலங்களை, பிராண்டின் முகமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், பிரபலங்களும் லட்சகணக்கில் பணம் ஈட்டி வருகின்றனர். அந்தத் தொகையை இதுவரை வருமான வரியில் சேர்க்காமலேயே கணக்கில் காட்டாமலேயே பலரும் வந்திருக்கலாம். சில வாரங்களுக்கு முன்பு தான், வருமான வரித்துறை இவ்வாறு பிராண்டுகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பவர்களுக்கு TDS பிடித்தம் செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டது.

பிரபலங்கள் ஒரு பொருளை விளம்பரம் செய்தால், அல்லது இதை நான் பயன்படுத்தினேன், மிக நன்றாக இருக்கிறது என்று பதிவு செய்தால், அதை பார்க்கும் லட்சகணக்கான பார்வையாளர்களில் நூற்றுக்கணக்கானவர்களாவது வாங்குவார்கள். இதன் மூலம், பிராண்டுக்கும் நல்ல விளம்பரம், பிரபலங்களும் நன்றாக சம்பாதிக்கிறார்கள். ஆனால், இதை வாங்குபவர்கள், தனக்கு பிடித்த பிரபலம் இந்தப் பொருள் நன்றாக இருக்கிறது என்று கூறினார் என்ற காரணத்தால் மட்டுமே வாங்குவார்.இதனால், மக்களுக்கு ஒரு தயாரிப்பு அல்லது சேவை பற்றிய உண்மை நிலவரம் தெரியாது. பெருகி வரும் இன்ஃப்ளூயன்சர்களால், இவர்களுக்கான புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதை நிறைவேற்றும் வகையில், மத்திய அரசு, பிராண்டுகளுடன் கொலாபரெட் செய்யும் சமூக வலைத்தள பிரபலங்களுக்காக, ஒரு சில வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளதாகத் தெரிகிறது.

Also Read : சோஷியல் மீடியாவில் நீங்க படிப்பது எல்லாம் உண்மை தகவலா..! - என்ன சொல்கிறது ஆய்வு

அரசாங்கம் சார்பில், “சமூக ஊடங்களில் இன்ஃப்ளூயன்சராக செயல்படுபவர்களுக்கான வழிகாட்டுதல்களை, விரைவில் நுகர்வோர் விவரங்கள் துறை வெளியிட இருக்கிறது. இதில் அவர்கள் என்னவெல்லாம் செய்யலாம் மற்றும் செய்யக்கூடாது என்ற விவரங்கள் உள்ளன” என்று பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவிடம் தெரிவிக்கப்பட்டது.இந்த வழிகாட்டுதல்களைப் பற்றி பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா வெளியிட்ட விவரங்கள் இங்கே:

 

சமூக ஊடங்களில் இன்ஃப்ளூயன்சராக செயல்படும் எந்த பிரபலமும், ஏதேனும் ஒரு பிராண்டின் பொருளை அல்லது சேவைக்காக பணம் வாங்கிக்கொண்டு விளம்பரம் செய்தால், அவர்கள் பிராண்டுக்காக வேலை செய்கிறார்கள் என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

பிராண்டுக்காக ஒரு தயாரிப்பு அல்லது சேவை பற்றி பகிரும் போது, அந்தப் பதிவுகளில் என்டார்ஸ்மெண்ட் பற்றி குறிப்பிட வேண்டும். (இந்த குறிப்பிட்ட பிராண்டுடன் கொலாபரேஷனில் விளம்பரம் செய்யப்படுகிறது என்று குறிப்பிட வேண்டும்)

Also Read : அனுமதியின்றி நமது லொகேஷனை மற்றவருடன் ஷேர் செய்கிறதா இன்ஸ்டாகிராம்.? வெடிக்கும் புதிய சர்ச்சை.!

முழுமையான வழிகாட்டுதல்கள் அடங்கிய கையேடு இன்னும் இரண்டு வாரத்துக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், பெரும்பாலான வணிகங்கள் ஆன்லைனில் நடைபெறுவதால், ஒரு நிறுவனத்தை போலியான ரிவ்யூக்கள், நெகட்டிவ் மதிப்பீடுகள் வைத்து மொத்தமாக நீக்கி விட முடியும். எனவே, இதனை தவிர்க்க, கடந்த மே மாதம், இந்திய விளம்பர தரக் கவுன்சில் உடன், இந்தியாவின் முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் ஒரு விர்ச்சுவல் மீட்டிங்கை நடத்தின. அதில், ஆன்லைன் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மீது வழங்கப்படும் போலியான மதிப்புரைகள் வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துகின்றன என்பதை பற்றி விவாதிக்கப்பட்டது. எனவே, ஈ-காமர்ஸ் தளங்களில் வெளியாகும் போலியான ரிவ்யூக்களை நீக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Influencer, Social media

அடுத்த செய்தி