Home /News /business /

இனி இந்த பொருட்களை விற்கக்கூடாது - அமேசானுக்கு உத்தரவிட்ட அரசாங்கம்.!

இனி இந்த பொருட்களை விற்கக்கூடாது - அமேசானுக்கு உத்தரவிட்ட அரசாங்கம்.!

அமேசான்

அமேசான்

Amazon | டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரேஸ் மிஸ்டரியின் மரணத்திற்குப் பின்பு சில பொருட்களை விற்பதற்கு அமேசானுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது அரசாங்கம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
டாடா குழுமத்தின் முன்னால் தலைவர் சமீபத்தில் கார் விபத்தில் உயிரிழந்தார். இதைப் பற்றி ஆராய்ந்த இந்திய அரசாங்கம் இது போன்ற விபத்துக்கள் மேலும் நடைபெறாமல் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் முயற்சியில் செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையில் அமேசானில் விற்கப்படும் சிறிய ரக உலோக கிளிப்புகள், மற்றும் வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்களை செயலிழக்க வைக்க கூடிய பல பொருட்களை விற்பதற்கு அமேசானுக்கு தடை விதித்து அறிவிப்பு ஒன்றை இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

காரில் ஒருவர் சீட் பெல்ட் அணியாமல் அமரும்போது அதனை வலியுறுத்துவதற்காக அலாரம் ஒன்று அமைக்கப்பட்டு இருக்கும். அமேசானில் விற்கப்படும் இந்த சிறிய உலோக கிளிப்புகளை பயன்படுத்தி அந்த அலாரங்களை நாமே நீக்கிக் கொள்ள முடியும். வெறும் 249 ரூபாய்க்கு இந்த பொருள் விற்கப்படுகிறது. அதில் “இந்த கிளிப்புகளை பயன்படுத்தி உங்கள் கார் அலாரத்தை நீங்களே செயல் இழக்க செய்யலாம்” எனும் விளம்பரத்தையும் அமேசான் செய்துள்ளது.

விலை குறைவாகவும் எளிமையாகவும் இருப்பதினால் எளிதில் இது பலரை சென்றடைந்தது. இதைப் பற்றி தெரிந்து கொண்ட நம்மூர் மக்கள் மிக அதிக அளவில் இந்த கிளிப்புகளை வாங்கி அந்த அலாரத்தை வேலை செய்யாமல் செய்தனர். இது மிகப் பெரிய அளவில் விபத்துக்களை ஏற்படுத்தி அதிக அளவில் உயிர் சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தியது.



இதன் காரணமாகவே இந்த பொருட்களை இனிமேல் விற்பதற்கு தடை செய்து இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

Also Read : உஷார்..ஹெல்மெட் அணிந்திருந்தாலும் இதை செய்யாவிட்டால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும்!

பின் சீட்டில் அமருபவர்களும் சீட் பெல்ட் அணிய வேண்டும்:

இது சம்பந்தமான ஒரு அறிக்கையை மத்திய சாலை, போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். அதாவது முன்னதாக வண்டியின் ஓட்டுநரும், முன் சீட்டில் இருப்பவர்கள் மட்டுமே சீட் பெல்ட் அணிந்தால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது இந்த விபத்திற்கு பிறகு விழித்துக் கொண்ட அரசாங்கம் இனி வெளியிடப் போகும் புதிய போக்குவரத்து விதிமுறைகளில் காரின் பின்புறம் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணிய வேண்டும் இல்லாவிடில் அதற்கு அபராதம் விதிக்கப்படும் எனும் புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. இனி தயாரிக்கப்படும் கார்களில் பின்பக்கம் உள்ள சீட்டில் சீட் பெல்ட் அணியாமல் இருந்தாலும் அலாரம் அடிக்கும் வகையில் தயாரிக்க வேண்டும் எனும் உத்தரவையும் வெளியிட உள்ளது இந்திய அரசாங்கம்.
Published by:Selvi M
First published:

Tags: Amazon, Central government

அடுத்த செய்தி